உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

'அடையில் கிடக்கும் கோழி, குஞ்சைப் பொரிக்கிறது. அதனைப் போல, அடையில் கிடந்து வெப்பம் தந்தால் குஞ்சு பொரிக்கத்தானே செய்யும்" என்றான்.

நகைப்பாய் நகைத்தனர் எழுப்பினோர்.

ஆனால் இன்று என் ஆனது?

அவன் ஆய்வு வழித்தடம், நகைத்தவர் தம்மை மட்டுமா? நானிலம் நகைக்க நடைமுறையாகி விட்டது!

குஞ்சு பொரிக்கும் வெப்பப் பொறிகள், ஒரு நாளைக் குள்ளே முட்டையைக் குஞ்சாகப் பொரித்துத் தருதலை நாமறி கின்றோமே!

இந்த இளைஞன் இருநூற்றுக்கு மேலும் அறிவியல் கருவிகள் கண்ட விந்தை அறிவினன், தாமசு ஆல்வா எடிசன்! இப்படி முயற்சியன் ஒருவனை வள்ளுவர் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்து நின்றாரோ?

"அரிய என்றாகாத தில்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்”

என்றாரோ!

(537)

பொச்சாவாமை

-

மறதி இல்லாமை; கடமையில்

சோராமை.