உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தே மாதக் குழந்தை.

17.

பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

பரண் மேல் இருந்த வேட்டைத் துப்பாக்கியை எடுத்துக் கீழே வைத்து விட்டுப் பரணையில் கிடந்த ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார் வீட்டுக்காரர்.

கண்ணில், துப்பாக்கி

பக்கத்து வீட்டுச் சிறுவன் விந்தையாயது. விளையாட்டாக எடுத்தான்.

தள்ளு குதிரையில் கைவிரல் பட்டது.

என்றோ போட்டு வைத்து, எடுக்காதிருந்த குண்டு, வெளிப்பட்டுச் சீறிச் சென்றது.

சென்றது, பொம்மைக் குழந்தையின் பிடரியில் பட்டு மூளையுள் புகுந்தது. எண்ணியா எதுவும் நடந்தது?

எண்ணி ஏதாவது செய்யாவிட்டால் என்ன ஆவது?

என்ன ஆகுமோ?' என்று குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு எய்தினர்.

படங்கள் படங்கள் அத்தனை படங்கள்!

ஆய்வு! ஆய்வு! அத்தனை ஆய்வு!

எடுக்காவிட்டால் குழந்தை தப்பாது!

எடுக்கும் போதே, குழந்தை தப்பாதே!

எதுவும் நடக்கும் எந்தப் பொழுதும்!

"இருக்கும் வகையிலே காப்பதற் கெண்ணலே நல்லது."

மருத்துவர் பலர்! அவர் முடிபுகளும் பல.

மூன்று நாளாய் ஒரு முடிபும் இல்லை.

"முற்றிவிட்டால் முடியாது ஒன்றும்'