உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

துணிந்தார் ஒருவர்.

"அறுத்து எடுத்து அகற்றுதலே ஆருயிர் காக்கும் வழி'

என்றார்.

55

பலரும், "ஆகும் செயலன்று என்றே இறுதி வரை கூறினர். எண்ணிய படியே யே இனிதில் முடியும்; துணிந்து செய்தலே என் கடன்" என்று உறுதியானார் துணிவர்.

அறுவை நிகழ்ந்தது.

"மூளைப்பகுதி சிறிதே சிதையினும், கால்கை இயக்கம்

இல்லாமல் ஒழியும்;

பேசா நிலையும் ஆகும்;

குண்டு எடுத்தல் ஒரு பணி; எடுத்தல் முயற்சியால் பின் விளைவு ஏற்படாது காத்தல் பெரும்பணி"

பற்பல நெருக்கடி ஒரே பொழுதில்.

அறிவு - தெளிவு - துணிவு!

அறுவை இனிதின் நிகழ்ந்தது.

எச்சிறு குறையும் இன்றிக் குழந்தை நிலைமை தேறுதல்

ஆயது?

நம்பிக்கை இல்லா திருந்த மருத்துவர் தாமா.

நம்பிக்கை கொண்டு துணையாய் நின்றவர் தாமும்

கையில் கருவி கொண்டு துணிந்து கடமை செய்தவர்

தாமும் - அனைவரும் வியப்பக் குழந்தை, நலத்தொடு பழைய படியே மழலைத்தேனில் பெற்றோரை நனைத்த பேறு வியப்பின் கொள்ளையாய் அமைந்தது.

அந்த மருத்துவப் பெருந்ததை கசேந்திரனார் என்பார் மதுரை வாழ்வினர்.

"ஊழிற் பெருவலியாவுள" என்பது நேர்ந்த நேர்ச்சி. 'ஊழையும் உப்பக்கம் காண்வர்" என்பது மருத்துவர்

தேர்ச்சி.

இத்தகு காட்சியும் நேர்ச்சியும் வள்ளுவக் கிழவர் கண்டாரோ?