உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

நாற்காலியிட்டு அமரச் செய்தார்.

கதவை மூடினார்.

இயல்பாய் இருந்த கையைப் பற்றி, நாடிபார்த்தார்.

நாடிபார்த்த கையை, நன்றாய் இறுக்கி

177

நழுவாதிருக்க, வைத்துக் கொண்டார் ஒருகையால்! மற்றொரு கையால், சீலையைப் பற்றிச் சட்டென

இழுத்தார்!

அம்மவோ! என்னே வியப்பு!

இறங்காக் கையும் நொடியில் இறங்கி

மின்னற் கீற்றாய் வளைந்து

இழுபடு சீலையை இறுகப் பற்றிக் கொண்டது!

விலகிய மூட்டும் - விலகும் சீலையை விலக விடாமல்

பற்றும் விந்தை என்னையோ என்னை!

மானக் கொள்கலம் ஈதென உணர்ந்த மருத்துவ மாமணி

விந்தை வினைத்திறம் என்னையோ என்னை!

இந்த மருத்துவர் அரங்க (ஈச்சாரியா)ர் என்பார்.

வள்ளுவக் கிழவர் இப்படித் திறத்தைக்

கருத்துக் காட்சியாய்க் கண்டாரோ?

என்னே என்னே என்று துடிப்பொடு நின்றாரோ?

அதனால்,

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”

என்றாரோ?

(788)