உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18.

எழுந்தார் ஒரு பெண்மணி!

உறக்க மயக்கம்!

சோம்பல் முறிக்கத் தூக்கினார் கைளை;

தூக்கிய கைகளுள் ஒன்று இறங்கவே இல்லை! மூட்டு விலகி, உயர்த்திய நிலையிலே இருந்து இறங்குதல் இன்றி நின்றது!

>

வென இரைந்தார்!

மூட்டைச் சேர்க்க முயன்றார் பெரிதும்!

கண்ட வலியன்றிக், கொண்டபயன் இல்லை!

கதறிக் கதறிக் கண்ணீர் வடித்தார்!

கணவர் கலங்கினார்!

உதவ ஓடினார்!

கையைத் தொடவே விட்டிலர் அவரை!

வாராக் கையின் வலியோ உயர்ந்தது!

வழி வழியக் கதறினார்!

கலங்கிய கணவர் கடிதில் ஓடி,

மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தார்.

வந்த மருத்துவர் நிலைமையைக் கண்டார்;

நிகழ்ந்தது கேட்டார்.

அவரையும் தீண்ட விட்டார் அல்லர்!

தனியறை ஒன்றில் அவரை நிற்க ஏவினார்.

அவரின் முன்னர், அவர்தம் கணவரை