உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

179

'சே சே! அன்னையா இவள்? கொண்ட கணவனுக்கும் உதவாள் மனைவியா?

-

உள்ளம் வெதும்பினர் மூவரும்.

நண்பன் ஒருவன் நண்ணினான்;

"நானென் சிறுநீரகம் பொருந்தின் தருவேன்" என்றான்.

'நன்றி'யென் றழைத்து மருத்துவ ஆய்வுக்குச் சென்றனர். பொருந்தி நின்றது அது

பூரிப் படைந்தனர் அனைவரும்.

பொருந்திய நாளில் பொருத்தி விட்டனர்.

அதற்கும் கூட அன்னை வந்திலர்!

66

என்ன கொடுமை; இவர்தம் முகத்து விழித்தலும்

இழிவே" என்று வெறுத்தனர்.

செய்தி வந்தது வீட்டுக்கு அருகே வாழ்பவர் வழியே! "அம்மா இறந்து போனார்"

தந்தைக்குச் சொல்லாமல் மக்களும் மருகியும் வீட்டுக

கோடினர்.

என்ன செய்வது?

அடக்கம் செய்தனர்!

அடக்கம் செய்த பின்னரும் அகத்தே வெப்பம் இருக்கவே செய்தது?

"இந்த அன்னை இரக்கம் இல்லாதவள்!

தந்தைக் கிதனை எப்படி உரைப்து?

எத்தனை நாள் தான் மறைப்பது?”

மருத்துவர் குறித்த பொழுதில், நிகழ்ந்ததைத் தந்தைக்கு உரைத்தனர்.

உரைத்த அளவொடும் நிறுத்தினர் அல்லர்.

உளத்தின் கொதிப்பையும் கூடவே உரைத்தனர்!

தந்தை விம்மினார்! கண்ணீர் வடித்தார்!