உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

"தாயைப் பழியீர்! தாயைப் பழியீர்!

தவறே அறியாத் தெய்வம் அவளே!

பழியேன் பட்ட கடனைத் தீர்க்க வழியற்று நின்றேன்.

குடற் புண்ணுக்கு அறுவை செய்யும் நெருக்கடி நிலையை, நேர்ந்த நலமாய்ப் பயன்படுத்திக்கொண்டு, அவளே அறியா வகையில் சிறுநீரகத்தை எடுத்து இலக்கமாக்கி, இழிவைத் தீர்த்த இழிஞன் யானே!

இதனை வெளிப்படச் சொன்னால்,

என் பழிச் செயல் பளிச்சிடுமெனக் காத்த கற்பினள் அன்னாள்!

மருத்துவ ஆய்வுக்கு அவளிங் கெய்தின் மறைத்தது வெளிப்பாடாமே!

மணந்தவன் மானம் அழிந்துபோமே!

என்பதால் ஒடுக்கி ஒடுக்கி ஒடுங்கியே போனாள்!

என் புகழ் காக்கத் தன்னையே ஒடுக்கிய உயர்ந்தவள் அவளை, ஒரு பழி சொல்லேல் என்றார் உணர்ந்த தந்தை!

என்னே எங்கள் சிறுமை; உருகும் தாயைப் பெருகப் பழித்தோமே! என்றே உருகினர்.

குடிப்புகழ் காக்கும்

இத்தகு தெய்வத் துணையின் குடிப்புகழ் மாட்சியை வள்ளுவக்கிழவர் கண்டாரோ?

என்னே என்னே என்று வியந்து நின்றாரோ?

அதனால்,

"தற்காத்துக் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

என்றாரோ?

(56)

2 -1- 92 குமுதம் ; அம்மாவா இவள்! சே! எத்தனை பெரிய கல்நெஞ்சக்காரி (சரோசு) என்பதன் கருத்தைக்கொண்டது.