உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.

ஆற்று மணலில் வண்டி ஓடுமா?

கடற்கரை ஓரம் பரவிக் குவிந்த மணல் வெளியிலே மிதிவண்டி ஓட்ட இயலுமா?

பாலைவனத்தின் மணற்பெரும் பரப்பில் ஒருவர் இருவர் அல்லர் அறுவர் துள்ளுந்து ஓட்டிக் கடந்து வென்றுளர்!

பாலைவனம் என்ன சிறிய பாலைவனமா?

உலகப் பெரும் பாலைவனம்-ஆம்! சகாராப் பாலைவனம்? ஒருகல் தொலைவா - இருகல் தொலைவா?

6000 கல் தொலைவு.

மொராக்கோ, அல்சீரியா, நைகர், நைசீரியா ஆகிய நான்கு நாடுகள் அடங்கிய பகுதியைக் கடக்க வேண்டும்.

பகலிலே கடுவெயில்!

இரவிலே கடுங்குளிர்!

ஒன்றற் கொன்று நேர் எதிரிடை!

கொள்ளைக் கூட்டம் சூழ்ந்து வளைத்துச் சூறையிட்டதும்

உண்டு.

செல்லும் வழி தவறிச் சென்ற நிலையும் உண்டு.

சொல்லி வழிகாட்டும் ஆளும் இல்லா அயர்வும் உண்டு! மொழியோ பிரெஞ்சு மட்டுமே ஆங்கு வழங்கு மொழி!

நல்லவேளை பிரெஞ்சு மொழி அறிந்தார் ஒருவர் இருந்தார். வண்டி பழுதாதலுக்குக் கேட்க வேண்டுமா?

அதனைச் சீர் செய்ய வல்லார், ஒருவரும் பெற்றிருந்தார்.

டம்