உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

1991 திசம்பர் 19-இல் புறப்பட்ட செலவு

1992 சனவரி 9-இல் நிறைந்தது.

கலந்து கொண்டோர் இந்திய வான்படை அலுவலர்

கோ கா ராகுல்ராவ்; ரோலண்டு திசவுசா; நெவிலி தருகன் வாலா, சி.கே.சின்னப்பா, திலீப்ராம், பரூக்சைக் என்பார் அவர்கள் அனைவரும் இந்திய நாட்டினர்.

பனிமலை ஏற்றம் அரும்பெரும் முயற்சி என்றால்

பாலைவனச் செலவும் அத்தகு முயற்சியே யன்றோ!

அயரா முயற்சியால் அரும்பாலை கடந்து வாகை சூடிய இத்தகு வீரரரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே என்னே என்று வியந்து வாழ்த்தி நின்றாரோ?

அதனால்,

'அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்”

என்றாரோ?

(611)

செய்தி: தினகரன் : 12 - 2- 92