உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.

காவல் துறையின் உளவுப் பிரிவில் கடமை;

கன்னித் தமிழ்த் தொண்டில் ஈடுபாடு;

கடமையும் தொண்டும் தொடர்ந்தன;

பின்னர்த் தொண்டே கடமையாயிற்று.

ஆங்கிலர் இயற்றிய மருத்துவ நூல்களை ஆய்ந்தார். மருத்துவ அகர முதலிகளையும் ஆய்ந்தார்.

தமிழுக்கும் அவ்வாறு அகர முதலி தொகுக்க முனைந்தார்.

வேதியியலும் செடிகொடி இயலும் மருத்துவ இயலும் அரிதில் அரிதாய் ஆய்ந்தார்.

அகர முறையில் சொற்களை அடைவு செய்து தமிழ் ஆங்கில இருமொழி அகரமுதலி அமைத்தார்.

அ-ஒள ஒரு தொகுதி.

க-கௌ-ஒரு தொகுதி.

பக்க அளவோ 1752.

அச்சிடத் தொகையோ இல்லை.

அச்சிடாதிருக்க மனமோ இல்லை.

என் செய்வார்?

தமக்கென இருந்த நன்செய் இரண்டு வேலி!

இரண்டு வேலியும் விற்றார்!

அச்த வேலையைத் தொடர்ந்தார்.

அதுவும் போதாமை என்றால், என்னே செய்வது?

சென்னை அரசு உதவ வந்தது.

இருந்து பணிசெய்ய இல்லமும் உதவியும் செய்தது.