உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.

உருக்குத் தொழிலில் இருவர் இருந்தனர்.

இருவருக்குள்ளும் கடிய போட்டி;

ஒருவருக் கொருவர் குறையா அளவில் இழப்பு;

போட்டி வணிகம், மூடும் அளவில் முட்டுற்று நின்றது.

ஒருவர் எண்ணினார்.

"இழப்பை ஒழிக்கவும், முட்டுற்று நிற்பதை முடுக்கிவிடவும் வழிவகை காண்பேன்" எதிராய் இருந்தவர்.

எதிர்பாரா நிலையில் எதிரே நின்றார்.

"நமது போட்டியால் நம்மிருவர்க்குமே இழப்பு! நாமிருபேரும் இணைந்து செய்யின் என்ன? என்றார். இணைந்து செய்யின், அதற்கு எப்பெயர் இடுவது? "எப்பெயர் இடுவது என்பது என்ன?

தங்கள் குழும்புப் பெயரே பெயர் என்றார். "அப்படியானால் பேசலாமே" என்றார்!

இருவரும்பேசி இணைந்து நடத்தினர்.

இழப்பு மாறி வருவாய் பெருவாய் ஆயது!

கோடி கோடி தாலர் தேடிக் கொள்ளை கொள்ளையாய்க் குவித்தனர்.

தம்பெருமை கருதாது, தம்பெயர் கருதாது விட்டுக் கொடுத்து வீழ்ச்சியை எழுச்சியாய் ஆக்கியவர்.

ஆண்டுரூ கார்னீசி!

அதற்கு ஒத்துப் போனவர் புல்மென் என்பார்!

அமெரிக்க நாட்டின் தொழில் தோன்றல்கள் இவர்கள்!