உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.

"கையூட் டொழிப்புக்

நடவடிக்கை"

என்பது செய்தி (தஞ்சை 19

-

காவற்படை

4

-

91 தினமலர்)

அதிரடி

கையூட்டொழிப்புக் காவலர் எவர்மேல் நடவடிக்கை

எடுத்தனர்?

மதுவொழிப்புக் காவலர் மேல், நடவடிக்கை எடுத்தனர். ஒருவர் இருவர் அல்லர்; நால்வர் கூட்டுக் கொள்ளை; அவர்கள் பெற்ற கையூட்டுத்தொகை இருபத்தேழாயிரம். குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்க உறுதிபூண்டு.

அவ்வொழிப்புக் கெனவே சம்பளம் பெற்றுவரும் காவல் கடமையர் இக்கயமையில் இறங்கினர் என்றால் இது வேலியே பயிரை மேய்ந்த விளக்கம் தானே?

எதற்காகக் கையூட்டுத் தந்தனர்?

மதுவொழிப்பை ஒழிக்க வேண்டும் என்பதற்கு!

கண்டும் காணாமல் இருக்கவேண்டும்;

காட்டிக் கொடுப்பார் இருப்பினும், அதனைக் காணாமல் காவலாக இருக்க வேண்டும்;

கடமையை ஒழித்துக் கயமைக்குத் துணைபோய இவர்கள் செய்துள்ள ஒழிப்பு, ஒன்று மட்டுமா?

மதுவொழிப்பை

படுகின்றது!

ஒழித்த ஒன்றுதானே வெளிப்

கடமையில் தவறேன்' என்று பணியில் சேரத் தந்த

உறுதியை ஒழித்தார்.