உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

குற்ற நெஞ்சம் குத்திக் குத்திக் குமைத்தது.

195

வாழவைக்கும் வஞ்சமிலான் வாழ்வை, அழிக்கத் துணிந்த,

என் வாழ்வென்ன வாழ்வோ?

இருக்கவோ வேண்டும் இன்னும்?

இனியனைப் பார்க்கவோ வேண்டும் இன்னும்?

நலமுற்று நண்ணுமுன், நாணப்பிறவியாம் நானிவண் இருக்கமாட்டேன்!

'அவன் வருமுன்னே, ஆவியை விடுவேன்', என்றனள்; எண்ணினாள்;

எடுத்தாள் மீண்டும் எண்ணெயை!

எடுத்தாள் மீண்டும் தீயை!

எண்ணெயில் குளித்து எரியில் குளித்துக் கரிந்தே போனாள்!

கணவனா எரித்தான்?

காவல் துறையா கொன்றது?

ஊரவர்தாமோ ஒழித்தனர்?

உயிரோடு ஒழியச் செய்தவர் எவரே?

உய்யா தொழியச் செய்தது உள்ளமே யன்றோ!

இப்படி ஒரு நிகழ்ச்சியை வள்ளுவர் கிழவர் கண்டாரோ?

என்னே என்னே என்று இரங்கி நின்றாரோ?

“செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும் {313)

என்றாரோ?

தினமணி 26-12-91 செய்தி.