உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28.

டு இருந்தது; வீட்டின் உரிமையும் அவர்க்கே இருந்தது. துறவு விருப்பராய்த் துறவு மடம் ஒன்றைச் சார்ந்தார்.

இருந்த வீட்டை நண்பர் ஒருவர் பொறுப்பில் விடுத்துத் தக்க வகையில் வாடகைக்கு விடுதற்கு ஏற்பாடு செய்தார்.

மாத வாடகை பேசினார்!

வாடகை போல இருபது மடங்கு முன்பணம் வாங்கினார். மேலும் அதைப்போல் இரு மடங்கு பெற்றார்; தாமே தமதாய் எழுதியும் தந்தார்.

வாடகைக்கு விட்டதோ, முன்பணம் பெற்றதோ மேலும் கொண்டதோ துறவு நண்பர்க்கு உரைத்தார் அல்லர்!

அவர்தம் துறவர் அல்லரோ? அவர்க்கேன், இத்தகு தொல்லை!

வீட்டைக் கருதித் துறவு சென்றவர் வீட்டைப் பற்றிய செய்தியை அறிவதற்கு ஒருநாள் ஆவலுற்றார்.

மலையடி நீங்கி மாநகர் உற்றார்.

வீட்டைப் பார்த்தார்!

உள்ளம் வெடித்துப்போனார்!

வீடே உருவம் மாறி விளம்பரப் பலகையும் விளக்கும் கொண்டு. 'வா' வென நகைத்தன! செல்வர் ஒருவர் கடையிது வென்னும் செழிப்பும் காட்டின!

எதுவும் சொல்லாமல் என்ன நடந்தது? தோலிருக்கச் சுளை விழுங்கியதாகிவிட்டதே! நண்பரைக் காணலாம் என்று போனார்!

புதியவர் வந்ததும் புண்பட்டுச் சொன்னதும் ஏமாந்து போனோம் நாமும் என்னும் புளியைக் கரைத்து விட்டது வாடகைக்குக் கொண்ட வாணிகர் தமக்கு!