உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

துறவரோடு உறவராகித் தேடிச் சென்றார்!

காணவா முடியும்?

காணவில்லையே என்று விடவும் முடியுமமா?

199

காசு போயிற்றே! கொஞ்சமா நாற்பதாயிரம் அல்லவோ கையை விட்டுப்போய்விட்டது!

காவல்துறைக்குச் சென்று வழக்குப் பதிந்தனர்!

மேற் செலவு இன்றி எதுவும் நடக்குமா?

இழப்புக்கு மேல் இழப்பே ஆயினும் விடவா முடியும்? ஏமாற்றிய நண்பர் சிறையில் உள்ளார்!

வழக்கோ முறைமன்றில் உள்ளது!

துறவரும் வணிவரும் என்ன ஆமோ என்னும் சிக்கலில்

உள்ளனர்!

எத்தகைய நட்பு! ஆ! ஆ!

இத்தகு வஞ்ச நட்பையும், அந்நட்பின் கேட்டையும் அன்றே வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே கொடுமை என்றே வருந்தி நின்றாரோ?

அதனால்,

“நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்டாள் பவர்க்கு”

என்றாரோ?

(791)

(வீடில்லை என்பதற்குத் துன்பத்தில் இருந்து விடுதலை என்னும் பொருள்தானா உண்டு? இந்த நட்பால் 'வீடும் இல்லை' என்பதும் தெளிவாகி விட்டது அல்லவோ!)

செய்தி : 12 - 1 -92 தினமலர்.