உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.

மாட்டு வண்டிக்காரன் ஒருவன்.

அவனுக்குச் சிறிதே நிலமும் ஒருவீடும்.

வாடகைக்காக மாட்டுவண்டி யோட்டுவான்.

நாட்டில் மழையில்லை.

காட்டில் விளைவில்லை.

வீட்டில் புகையில்லை.

தின்னும் வறுமை.

வாடகை வேலையும் இல்லை.

ஒரு நாள் வாடகை வாய்த்தது.

வண்டியோடு போனான்;

ஆற்றுப் பாலத்தில் மாடுகள் வெருண்டன;

வண்டியும் மாடுமாய் ஆற்றுப் பாலத்தில் இருந்து வீழ்ந்தான்.

மாடுகள் போயின;

வண்டியும் போயது;

அரைகுறை உயிராய்க், காலும் கையும் ஒடிந்து தப்பினான்.

புகையா வீட்டில் ஒரு நாள் புகை!

எரிந்தே போனது.

எல்லாம் போனது.

மனைவி ஒருத்தி.

எட்டு வயதில் ஒரு மகன்.

ஒரு வயதில் ஒரு பிள்ளை.

நால்வர் குடும்பத்தில் இவ்வளவு முட்டடி!