உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

வருந்தினார். அதிகாரி என்ன சொல்லுவாரோ என்பது அவர் கவலையாக இருந்தது. அதனால் கரம்சந்திரரின் காலை மிதித்து, அடுத்த பையனைப் பார்த்து எழுதுமாறு குறிப்பால் கூறினார். ஆனால் தெரியாத ஒன்றைத் தெரியும் என்று பொய்யாக நடிக்க விரும்பவில்லை இளைஞர் கரம்சந்திரர். அதனால் ஆசிரியர் குறிப்புப்படி அடுத்தவனைப் பார்த்து எழுதாமல் நின்றார். ஆசிரியர் மேலும் ஓரிரு தடவைகள் வற்புறுத்தியும் இளைஞர் எழுதாதது கண்டு வருந்திச் சோர்வு கொண்டார். ஆசிரியரே பார்த்து எழுதச் சொல்லும்பொழுது எழுதமாட்டேன்' என்னும் வலிய உள்ளம் மாணவருக்கு ஏற்படுவது எல்லோரிடமும் எதிர்பார்க்கக் கூடிய நிகழ்ச்சியா? இக்குணம் இளமையிலே வாய்த்துவிட்டபடியால் தான் அஃது உலகப் புகழ் வாங்கித் தந்தது. இந்தக் கரம்சந்திரர் யார்?

அவரே நம் காந்தியடிகள்!

காந்தியடிகள் தொடக்கத்தில் வழக்கறிஞர் தொழில் புரிந்தார். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டவர்கள் பொய் சொல்லாமல் முடியாது என்பார்கள். ஆனால் காந்தியடிகளோ அந்த உரையையே பொய்யுரையாக்கி விட்டார்! அவர் பொய்மை கலவாத வழக்குகளையே தேர்ந்து எடுத்துக் கொண்டார். தாம் எடுத்துக் கொண்ட வழக்கில் 'பொய்'யும் கலந்திருக்கிறது என்று எப்பொழுதாவது உணர்ந்து விடுவாரானால் எதிரியினிடமே உண்மையை உரைத்து வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்.

ஒரு சமயம் தம் கட்சிக்காரன் ஒருவன் தம்மிடம் பொய் சொல்லியிருப்பதாக வழக்கு விசாரணையின் போது அறிந்தார். உடனே நீதிபதியினிடமே வழக்கினைத் தள்ளி விடுமாறு வேண்டினார். இப்பண்பு வழக்கறிஞர்கள் அனைவரிடமும் வந்து விடுமானால் நாட்டிலே நடைபெறும் வழக்குகளில் நாலில் ஒரு பங்குகூட நடைபெறுமா? ஆனால் வழக்கறிஞர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்களில் ஒரே ஒரு காந்தி தானே தோன்ற முடிந்தது!

அடிகளுக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் அரசாங்கத்

திற்குக் கட்டவேண்டிய வரிப்பணம் கட்டவில்லை. அரசினர் வழக்குத் தொடர்ந்தனர். காந்தியடிகளோ, தம் நண்பருக்காகப் பொய்யாக வழக்காடாது அவர் செய்திருக்கும் தவறான வழக்குகள் அத்துணையையும் வெளிப்படையாகக் கூறினார். அந்த மெய்யுரை ஒன்றாலே -சிறைத் தண்டனை, பொருள் தண்டனை என்னும் அளவில் நின்றது. காந்தியடிகள்,