உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

"என் வாழ்வில் சிக்கல் இல்லவே இல்லை' என்பார் எவரும் உளரா? உளர் எனின், அவர் வாழாதவராகவே இருப்பார் அல்லது இன்னும் பிறவாதவராகவே இருப்பார். வாழ்வார் எவர்க்கும் சிக்கல் என்பது பொது வரவு.

"கூழுக்கு உப்பில்லை" என்பதும் சிக்கல்தான்; “பாலுக்கு இனிப்பு இல்லை” என்பதும் சிக்கல்தான்.!

"பஞ்சாடை இல்லை கட்டுதற்கு" என்பதும் சிக்கல்தான்; "பட்டாடை இல்லை" என்பதும் சிக்கல்தான்.

சிக்கல்களில் ஏற்றத் தாழ்வு இருக்கலாமே அல்லாமல், அவரவர் அளவில் அவை சிக்கல்களே!

"பிள்ளையே இல்லை" என்பது ஒரு சிக்கல் என்றால், "பெண்ணே பிறக்கிறது" என்பதும், "பெண்ணே இல்லை" என்பது சிக்கல்கள் இல்லையா?

“ஆணும் பெண்ணும் உண்டு" என்றாலும் ஆகாவளியாய் அலவதப்படுத்தும் பிள்ளைகளைக் கண்டு, 'இவர்களைப் பெறாமலே இருந்திருந்தால்" என்று புலம்பும் பெற்றோர் இலரா?

44

"பிள்ளையென்றால் பிள்ளை என்று மகிழ வளர்ந்த பிள்ளைக்கு உரிய வாழ்க்கைத் துணை வாயாமல் போக வாய்த்தும் கொடுமையாய்ப் போகக் - காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும் குடும்பம் இல்லையா?

"பெற்றோர்க்குப் பாரமாக இருக்க மாட்டேன், அவர்களுக்கு என் உழைப்பால் தேடி உதவுவேன்' எனச் சொல்லிக் கொள்ளாமல், ஊரை விட்டு ஓடும் வறுமை பிள்ளை உண்டு என்றால், உள்ளத்தால் ஒத்துவராமல் இடைவெளி யுண்டாகி விட்ட 'கோடி வாழ்வன்' மகன், வீடே ஒப்பாரி வைக்க நாட்டை விட்டே ஓடிப்போவதில்லையா!