உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

என்பதைச் சொல்லுக்கு மட்டுமல்லாமல் சுவைக்கும் கொள்ளுதல் வேண்டும் அல்லவா!

நல்ல நாவன்மையர்; அறிவுக் கூர்ப்பர்; அவர்க்கு இனிப்பு நோய்; உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவர்; அவர் வாய் மைசூர்பாகுவை மென்று கொண்டிருந்தது. அவர் கை ஊசி மருந்தைத் தொடையில் செலுத்திக் கொண்டிருந்தது. "ஊசி எதற்காக?" என்றேன். "இனிப்பு நோய்க்காக!” என்றார். திகைப்பும் வியப்பும் அடைந்த யான், "நீங்கள் தின்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?" என்றேன்.

பெருகச் சிரித்த அவர், சிரித்துக் கொண்டே, "இனிப் பொன்றைக் கண்டு விட்டால் தின்னாமல் இருக்க என்னால் இயலாது" என்றார். அவர் வளர்ந்தவர்தாமா உள்ளத்தால்? வளராக் குழந்தைக்கும் கண்டதையெல்லாம் கைந்நீட்டி எடுத்துத் தின்னும் குழந்தைக்கும் அவர்க்கும் என்ன வேறுபாடு? அப்படிப் பட்டவர்கள், நோயைத் தாமே வருவித்துக் கொண்டு, வந்த பின்னரும் போகவிடாமல் பற்றிக் கொண்டு இருப்பவர்களும் அல்லரோ!

வள்ளுவத்தின் ஒன்பதாம் அதிகாரம் விருந்தோம்பல். அதில், இத்தனை வகை விருந்து, இன்னவகை விருந்து, இன்ன பண்டம், இன்னசுவை, விருந்தாக்கும் வகை என்பனவற்றைச் சுட்டிக்காட்டவும் படவில்லை.

விருந்து செய்தற் சிறப்பு, செய்வான் இயல்பு, பெறுவான் தகைமை என்பனவே குறிக்கப்படுகின்றன. முகமலர்தலும், இனியவை கூறலும் படைக்கும் உணவினும் சிறந்தது என்பதைக் காட்டுகிறது அது (84, 90). கொலை வேள்வியை ஒழித்து மாந்தருள் தக்கார்க்குச் செய்யும் விருந்தே வேள்வி என்பதையும் கூறுகிறது அது (88)

தொண்ணூற்று ஐந்தாம் அதிகாரமாம் 'மருந்து' என்ன சொல்கின்றது?மருந்தென வேண்டா; ஆம்" என்கிறது (942) மருந்ததிகாரத்திலே 'மருந்து வேண்டா என்பது எத்தகைய சுவையான முரண்?

உடல்நிலை, செரிமான நிலை, எரிநிலை என்பவற்றைப் போற்றி உண்டால் மருந்து வேண்டிராது; உண்ணும் உணவே ஊட்டதும் மருந்துமாய் அமையும் என்கிறார். ஒவ்வாமை என்பதொன்றும் உடலுக்கு உண்டு. அதனையும் அறிந்து கொண்டால் ஊறுபாடு உண்டாகாது. (945). உணவே குறியாக