உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<<

வாழ்வியல் வழிநடை

9

"அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்பது பழமொழி. ஆனால் நல்லவன் கையில் நாட்டாட்சி இருக்கும் பொழுது நாடெய்தும் நலங்களுக்கு அளவும் உண்டா?

பணிவுமிக்க ஆபிரகாம் ஒரு நாள் ஒரு தெருப்பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தார். அங்கே ஒரு குதிரை வண்டிக்காரன் நின்றான். அவன் லிங்கனைக் கண்டதும் புன்முறுவலுடன் நெருங்கினான்; வணக்க மிட்டான். "ஐயா, உங்கள் பொருள் ஒன்று என்னிடம் நெடுநாள்களாகக் காத்திருக்கின்றது. இதுவரை தங்களைக் கண்டுபிடித்து அதனைக் கொடுக்க முடியவில்லை. இன்றுதான் கண்டு பிடித்ததேன்; மகிழ்ச்சி" என்றான்.

இலிங்கனுக்குத் திகைப்பாக இருந்தது. ஏனெனில், லிங்கன் அந்தக் குதிரை வண்டிக்காரனை இதற்கு முன் கண்டதுமில்லை. எந்தப் பொருளும் கொடுத்திருக்கவும் இல்லை. இலிங்கன் கேட்டார்; “என்னுடைய பொருள், உன்னிடம் என்ன இருக்கிறது?"

'இதோ' என்று மழுங்கிப் போயிருந்த கத்தி ஒன்றை நீட்டினான் குதிரை வண்டிக்காரன். இலிங்கனது திகைப்பு வியப்பாக மாறியது. "என்னுடையதா இது?" என்று கேட்டார்.

"ஆம்: உங்கள் பொருள்தான். எப்படி என்றால் நெடுநாள் களுக்கு முன்பு ஒரு பெரியவர் என்னிடம் இந்தக் கத்தியைத் தந்து 'நீ பார்க்கும் ஆள்களிலே எவர் அழகற்றவராக அவலச்சணமாக இருக்கிறாரோ அவரிடம் இதனை ஒப்படைத்து விடு" என்றார். நானும் அப்படிப்பட்ட ஒருவரைத் தேடித்தேடி அலுத்தேன். இன்றுதான், தாங்கள் தான் அந்தப் பொருளுக்குரிய உடைமைக் காரர் என்பதைக் கண்டு பிடித்தேன்" என்றான் வண்டிக்காரன்.

முன்

இச் சொற்களை உணர்ச்சிமிக்க ஒருவன் கோபமுடைய ஒருவன் - கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான்? குதிரை வண்டிக்காரன் தன் பற்களைப் பொறுக்கி எடுக்க வேண்டிய நிலைமை ஆகாது இருக்குமா? ஆனால் ஆபிரகாம் என்ன செய்தார்?

'நண்பனே! மகிழ்ச்சி! என் பொருளை இதுவரை நீ பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய பொழுதில் ஒப்படைத்தும் விட்டாயல்லவா! என் பொருளைப் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி எனக்கு மிகவுண்டு. உனக்கு நன்றி" என்று கூறினார். "ஆபிரகாம்