உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

நீர் மனிதரல்லர்; மனித உருவிலே நின்ற தெய்வவுரு" என்று நமக்கு வாழ்த்தத் தோன்றுகிறது அல்லவா!

நெடு நெட்டையாகவும், மிக ஒல்லியாகவும், படியாத தலையராகவும் குழிவிழுந்த கன்னத்தராகவும் இருந்த ஆபிரகாம் அழகில்லாதவர் தான். உடல் உடை பற்றியோ, குளிப்பு தலை கோதுதல் பற்றியோ அவ்வளவாக அக்கறை கொள்ளாதவர் தான். காலிலே அணிந்து கொண்ட அடிபுதை அரணங்களை (பூட்சுகளை)யும் கால் உறைகளையும் எத்தனையோ நாள்களுக்கு ஒரு முறை கழற்றித் துடைப்பவர்தான். ஆனால் இந்த உடலழகினும் பல்லாயிரம் பங்கு சிறந்ததான உள்ளத்தழகு ஆபிரகாமினிடம் நிரம்பிக் கிடந்ததே! உள்ளழகு இருக்கும் பொழுது புற அழகு இல்லாவிட்டால் தான் என்ன?

உலக அழகுப் போட்டியிலே பங்கு எடுத்துக் கொண்டு முதற் பரிசு பெற்றவன் என்ன உலகத்தார் நெஞ்சத்தை விட்டு அகலாது இடம் பெற்றுவிடுவானா? அன்றி அவனென்ன அழியாத அழகனா? அவனுக்கும் இருபதில் எழுச்சி, முப்பதில் முறுக்கு, நாற்பதில் நழுவல், ஐம்பதில் அசதி, அறுபதில் ஆட்டம், எழுபதில் ஏக்கம், எண்பதில் தூக்கம் என்னும் நிலைகள் ஏற்படாது ஒழியுமா? எச்சிலும் மூக்கும் கோழையும் குன்னலும் நோயும் நொம்பலும் உலக அழகனுக்கு விதிவிலக்காக முடியுமா? அழியா உடலா அவன் உடல்? பண்புடல் ஒன்றே அழியாவுடல் ; அழகுமிக்க உடல்; அதனைப் பெற்றார் இலிங்கன். உலகத்தார் உள்ளத்தே அழியா எழுத்தில் எழுதப் பெற்று விட்டார்.

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி; அல்ல மற்றுப் பிற

(ஒருவனுக்கு அணிகலன் பணிவு உடைமையும், இன்சொல் உரைத்தலும் ஆகும். வையன்றி வேறு அணி கலங்கள்

உண்மையான அணிகலன்கள் ஆகா.)