உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<<

4. மட்டாடை

"அம்மா! பைத்தியம்; பைத்தியம்!" என்று சொல்லிக் கொண்டே வெளியேயிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தாள் சிறுமி ஒருத்தி உட்புறத்தில் இருந்த தாய், குழந்தை கூக்குரலைக் கேட்டுத் துடிப்புடன் முன்புறம் வந்தார். மெலிந்த உடலும், கிழிந்த உடையும், தாடி மீசையுமாக இருந்த ஒருவரைக் கண்டார். தம்மை மறந்து போய்த் தம் குழந்தையினிடம் "பாப்பா, பாரதி மாமா இல்லையா! அவர்தான்; வணக்கம் செலுத்து என்றார். அம்மையாரும் வணக்கம் செலுத்தி வரவேற்று இருக்கச் செய்தார்.

தூத்துக்குடியில் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார் பாரதியாரின் அன்பரும், தோழரும், உள்ளுர்க்காரருமான சோமசுந்தர பாரதியார். புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பின் தம் நண்பரைப் பார்ப்பதற்காகத் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் வந்த பொழுதிலே சோமசுந்தர பாரதியார் வெளியே சென்றிருந் தார். அவர் மனைவியும் குழந்தையும் வீட்டில் இருந்தனர். குழந்தைதான் பாரதியாரின் தாடி மீசை உடைகளைக் கண்டு "பைத்தியம், பைத்தியம்" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தது.

சற்று நேரம் கழிந்தது கவிஞர் "காக்கை குருவி எங்கள் சாதி' என்ற பாடலை முழங்கினார். வேறு சில பாடல்களும் பாடினார். ஆ ஆ! அந்த இசை வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி இன்புற்றனர். உடையில் அழுக்கு கிழிசல் உண்டு; உடலில் மெலிவும் களைப்பும் உண்டு. ஆனால் உள்ளத்தில் இருந்த ஊக்கமும் உணர்ச்சியும்? அவை பாரதியாருக்கே உரிமை

யானவை.

சோமசுந்தர பாரதியார், வீட்டுக்குள் கால்வைக்கு முன்னமே பாரதியார் தம் வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்து கொண்டார். அவர் என்ன பாரதியாரின் 'மணிக்குரலை' அறியாதவரா?

'பாரதி' என் று சொல்லிக் கொண்டு உணர்ச்சி மிக்கவராகக் கட்டித் தழுவினார். இன்பக் கண்ணீர் சொரிந்தார்.