உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

பின், பாரதியார் கட்டியிருந்த கந்தலாடையை நோக்கினார். அடுத்த நொடியிலே -அந்தோ! சோமசுந்தரரின் எஃகு போன்ற வலிய உள்ளமும் நெகிழ்ச்சியடைந்தது; கண்ணீர்த் துளியும் வழிந்தது. “நாட்டுப் பணிக்காகத் தன்னை ஒப்படைத்து விட்ட இந்த நல்லோன் நிலைமை இப்படியா இருக்க வேண்டும்? கோடி கோடியாக வெகுமதி பெற வேண்டிய பாடல்களைப் பாடும் இப்பாவலன் ஒரு பஞ்சையாகவா இருக்க வேண்டும்? அன்னைத் தமிழகமே, நீ உன்னை அழகு செய்ய வந்த புலமை மகனை இந்நிலைமையிலா விட வேண்டும்?" என்று உருகினார். உடனே, பட்டு வேட்டியும், பட்டுத் துண்டும் கொண்டு வந்து உரிமையாக ஏற்பட்ட உள்ளன்பால் தந்தார். எல்லோரும் பாரதியாருக்கு உடை தந்து விட முடியுமா?

"உன்னிடம் உடை வேண்டும் என்று எவன் கேட்டான்? இரப்பு வாங்கிக் கட்டும் இந்தப் பட்டாடைக்கு என் கிழிசலாடை கோடி கோடி கோடி தரம் மேல் : சே! இந்தா உன் உடை!" என்று முகத்திலேயே வீசி எறிந்து விட்டாலும் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. பாரதியாரின் உணர்ச்சி அத்தகையது.

சோமசுந்தரருடன் சற்று நேரம் அளவளாவிப் பேசி விட்டு, பாரதியார் உலாவி வரச் சென்றார். உலாவிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். அவர் தோளிலே கிடந்த சரிகைக் கரைத்துண்டைக் காணவில்லை. "என்னை பாரதி! துண்டு எங்கே?" என்று கேட்டார் சோமசுந்தர பாரதியார். "ஓ, அதுவா! இங்கே வா' என்று கையைப் பிடித்து ஒழுத்துக் கொண்டே சாலை வழியே சென்றார். அங்கே படுத்துக் கிடந்த பிச்சைக்காரன் ஒருவன் மேல் தாம் தந்த துண்டு போர்த்தப்பட்டிருக்கக் கண்டார்.

19

சோமசுந்தரர் ஒன்றும் சொல்லவில்லை பாரதியை நோக்கினார்: பாரதியார் சொன்னார்:

"மானத்தை மறைப்பதற்கு வேண்டிய கந்தலாடையும் இன்றி எத்தனையோ பேர்கள் வாழ்ந்து கொண்டிருக்க, நான் மட்டும் பட்டாடை கட்ட வேண்டுமா?" பாரதியாரின் இச் சொல் முழ ஆடை கட்டிய முனிவர் காந்தியாரை நினைவூட்ட வில்லையா?

சற்று நேரத்திற்கு முன் பாரதியார் நிலைமை எவ்வாறு இருந்தது? அந்தக் கந்தலாடை தானே அவருக்கும் உரிமை? பேரன்பால் பெற்ற பட்டாடையைப் பேணிக் காத்துக் கொள்ள எண்ணம் இருந்ததா? ஈவும் இரக்கமும் உள்ள உள்ளம் அடுத்த