உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

13

பொழுதைப் பற்றியோ தன்னைப் பற்றியோ எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றது அன்றோ!

சோமசுந்தரர் நெக்குருக எண்ணினார். அஃது இதுதான் : "பாரதி நன்றாக இருக்க வேண்டுமானால் இப்பாருலகம் முழுமையும் நன்றாக இருந்தாக வேண்டும். எந்த மூலையில் வெந்துயர் இருந்தாலும் பாரதியாரால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! துயரற்ற உலகம் வருமா?

"இடனில் பருவத்தும் ஒப்புரவிற்(கு) ஒல்கார் கடனறி காட்சி யவர்'

பிறர்க்கு உதவுதலைத் தம் கடமை என்று அறியக்கூடிய அறிவினை உடையவர் உதவுவதற்கு முடியாத நிலையிலும் உதவி செய்வதில் தளர்ச்சி யடையார்!