உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.ஊரும் பேரும்

ஒரு பெருங்காடு. அக்காட்டிலே ஒரு புலவர் நடந்து சென்றார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் சிலர் சென்றனர். வழியோ கரடு முரடான காட்டுப் பகுதி. மலையடிவாரம்; மலையுயச்சி. தொலைவும் மிக அதிகம். நடந்தவர்கள் அனைவரும் களைத்துப் போயினர். 'உட்கார்ந்து ஓய்வெடுத்தாக வேண்டும்' என்று சோர்ந்து விட்டனர்.

பெரிய பலாமரம் ஒன்றைக் கண்ட புலவர்கள் அதன் தண்ணிய நிழலிலே உட்கார்ந்தனர். வழிநடைக் களைப்பும் வயிற்றுப் பசியும் சோர்வினை உண்டாக்கி அயர்ந்து விடச் செய்தன.உட்கார்ந்து சாய்ந்த வண்ணமே கண்ணுறக்கமும் கொண்டு விட்டனர்.

வீரன் ஒருவன் ஓடி வந்தான். அவன் வலக்கையிலே வில் இருந்தது; இடக்கையிலே கூரிய அம்பு இருந்தது. தோளிலே அம்புக்கூடு தொங்கியது. காலிலே வீரர்கள் அணியும் கழலும், கையிலே கடகமும், மார்பிலே முத்தாரமும் கிடந்த அழகு செய்தன. அவனது வீரத் திறத்தையும், அஞ்சா உள்ளத்தையும் அவன் கண்களும், தோள்களும், மார்பும், ஏறு நடையும் வெளிக்காட்டின.

அயர்ந்திருந்த புலவர்கள் வீரன் வந்த ஒலி கேட்டு அரை குறையான பார்வையுடன் விழித்து நோக்கினர். அந்த வீரனைக் கண்ட பின்னரும் அவர்களால் உட்கார்ந்திருக்க இயலவில்லை. விரைந்து எழுந்திருப்பதற்குக் களைப்பு இடம் தர வில்லை. காலைப் பிடித்துக் கொண்டு மெதுவாக எழ முயன்றனர். வீரனோ புலவர்கள் களைப்பாக இருப்பதையும், எழுந்திருக்கவும் முடியாத சோர்வுடன் இருப்பதையும் அறிந்து கொண்டு "உட்காருங்கள், உட்காருங்கள்" என்று கையமர்த்தி விட்டு விரைந்து காட்டுக்குள் சென்றான்.

'வீரன் எங்கே போகிறான்' என்று புலவர்களுக்குத் தெரியாது. அவனது எழுச்சி மிக்க நடையினை நோக்கிக்