உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

235

கூறுவதை நோக்க நீ செய்தது தவறு என எண்ணிக் கொண்டு சொல்வது புரிகின்றது! அந்த மேதகு நிலை அடைந்தவர்,

"சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை

(330)

என்னும் நிலையை அடைந்தவர்கள். அவர்கள் ஈத்துவக்கும் இன்பமே இன்பமெனக் கொண்டவர்கள். உன்னைப் போன்ற வர்க்கு நான் சொல்ல வேண்டியதைச் சொல்லத் தவறவில்லை. வலியறிதல் என்பதை எடுத்துப்பார்! ஒருமுறை மட்டுமா மும்முறை அடித்துச் சொல்லியுள்ளேன்.

“ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி"

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்"

(477)

(479)

‘உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்”

(480)

என்பவற்றில் உள்ள "உளவரை" "அளவறிந்து" என்பவற்றைப்

பார் என்றார்.

வழுவாய்க்குக் கழுவாய்

செய்யக் கூடாத ஒன்றைச் செய்து விட்டேன்; அது தவறென உணர்கின்றேன்; அதற்குக் கழுவாய் என்ன என்று ஒருவன் கேட்கிறான். சமயத்தார் கூறும் கழுவாய்களைக் கண்டும் கேட்டும் அவ்வழித் தீர்வை நாடினை என்பதை அறிகிறேன். அறிவறி அன்ப, அத்தவற்றை மீண்டும் செய்யாதிருத்தலே அறமுறைக் கழுவாயாகும்; பிறமுறைக் கழுவாயைத் தேடித் திரியாதே என்றார். அது,

"எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று”

என்பது.

இல்லையா இல்லை

அது இல்லை இது இல்லை என்பது எனக்குத் துயராக உள்ளது. அதனைத் தீர்த்துக் கொள்வது எப்படி என்று தவிக்கிறான் ஒருவன். வள்ளுவரோ அமைந்த முகத்துடன்