உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

பூவைச் சுடும் தீயைப் போல உன் மனமலரைச் சுட்ட ஒருவனாக இருந்தால் கூட அவன் அதனை மறந்து மெய்யாகவே நல்லவனாகி உன்னோடு மாசறக் கூடுவானானால் நீ அந்நிலை யில் பழங்குற்றத்தை மறந்து போற்றிக் கொள்ளுதலே அவனைத் திருத்த வாய்த்த நெறியாகும். இல்லாக்கால் அவன் என்றும் தீயனாகவே இருந்து கேடனாகவே ஒழிவான்; அதனால்,

"இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று””

(308)

என்பதைக் கொண்டு நட என்றார். எனினும் தம் சொல்லால் அவன் கெட்டுப் போய்விடவும் கூடாதே என்ற அருள் நோக் கால், "அப்பா, அத்தகையவனையும் உடனே நம்பி உயிரன் பனாகக் கொண்டு விடாமல் கொஞ்ச நாள் ஆய்வு நிலையில் வைத்துப் பார்த்தல் நல்லது" என்றார். அவன் திகைத்தான். ஆம்! உன் திகைப்பு எனக்குத் தெரிகிறது. அறம் சொல்லும் கிழவர் இப்படியும் சொல்வாரா என்று திகைக்கிறாய்! என் சொல்லைக் கேளாதவனைக் கருதி, என் சொல்லைக் கேட்டு நடக்கும் அவனுக்கு என் சொல்லால் அழிவு நேர்ந்து விடக்கூடாது அல்லவா அதனால்,

"பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்”

என்பதைப் போற்றிக் கொள்வாயாக என்றார்.

(830)

பருந்து பறந்து வந்து குஞ்சைத் தாக்க வரும் போது கோழி தன் சிறகுகளை அரணாக்கிக் காப்பது போல் காக்கும் வள்ளுவப் பெருமகனார் வாழ்வியல் பார்வையை மெச்சினான். உச்சி குளிர்ந்து உவகை ஊற்றெடுக்கப் பாராட்டினான்.

உளவரை

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு'

99

(231)

என்பதைச் சிக்கெனக் கொண்டு உள்ளவற்றையெல்லாம் வாரி வழங்கி விட்டேன்; இப்பொழுது எனக்கே பொருட்சிக்கலாகி விட்டது என்றான் ஒருவனை நோக்கி உன் நிலையறிந்து உள்ளவையெல்லாம் கொடுக்க வேண்டும் என்று நீ கருதியதனால், இப்படி வருந்திக் கூறினை. நீ வருந்திக்

கொடாமல்