உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

233

உயர்வெல்லாம் அவராலேயே என்றும், அவர் காலத்தால் செய்த உதவியாலே ஆம் என்றும் கூறி,

“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”

(102)

என்னும் உம் குறளையே எடுத்துக் காட்டுகிறார். என் சிக்கலைத் தீர்க்க என்ன வழி? காலமெல்லாம் அவர் காலத்தால் செய்த நன்றிக்குக் கடன் பட்டவனாகவே வாழ வேண்டுமா? என்று வினாவினான் ஒருவன்.

வள்ளுவக் கிழவர் மெல்லென நகைத்து, "நன்றாக என்னை மடக்குகிறாய்; ஒரு குறளை அவர் எடுத்துக் காட்டினார் என்றால், அவர் காலத்தால் செய்தது உன் நலம் கருதியா? எதிர்காலத் தந்நலம் கருதியா என்று நீ எண்ணிப் பார்க்க வேண்டும் அல்லவோ!" என்றார் வள்ளுவர்.

"ஆம்! அது சரிதான்! ஆனால், உம் குறளைக் காட்டிக் குத்திக் கூறுவதற்கு என் வாக்கால் மறுமொழி சொல்வது என் தீர்வாக இருக்குமேயன்றி நீவிர் தந்த தீர்வாக இராதே! அவரும் ஏற்க, நானும் ஒப்ப, பிறரும் கொள்ள உம் உரையாக இருக்க வேண்டுமே" என்றதும், கலகல வெனச் சிரித்தார் வள்ளுவப் பெருமான்.

“அப்பா எட்டப் போகாதே! அடுத்த பக்கம் கூடப் போகாதே! அடுத்த பாட்டிலேயே லேயே அச்சிக்கல் தீர்வு இருப்பதைக் காண்பாய்" என்றார். ஆம்; அடுத்த குறள்,

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது”

என்றிருந்தது.

(103)

தமக்கு உண்டாகும் பயனை எண்ணிப் பாராமல் காலத்தால் செய்த உதவியே சாலச் சிறந்தது என உணர்ந்து கொண்டால் சிக்கல் தீர்ந்து போகின்றதே!

பகை நட்பு

எனக்குப் பகையாக இருந்த ஒருவன், தன் பகையை மாற்றிக் கொண்டு என்னை நெருங்குகிறான். நான் என்ன செய்ய வேண்டும் என்றான் ஒருவன்.