உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

மெய்ப்பொருள் காண்

66

அவனை நம்பினேன்; அவன் சொன்னதையெல்லாம் கேட்டேன்; அதனால் கெட்டேன்” என்பான் ஒருவனை நோக்கி, போனது போகட்டும் இப்பொழுதாவது புரிந்து கொண்டாயே; அதுபோதும்; அந்த அளவுக்கு நன்மையே' என்று தெளிவித்தார்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு’

""

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(433)

(355)

என்பவற்றைப் போற்றிக் கொள். வருங்காலத்தேனும் வாயிழந்தும் கையிழந்தும் போக மாட்டாய் என்றார்.

நல்லதன் தீது

நான் காலமெல்லாம் நன்மையே செய்தேன்; எனினும் அதனைப் பொருட்டாக எண்ணாமல் போனது மட்டுமில்லை; எனக்குத் தீமை செய்யவும் என்னைக் குறை கூறவும் வருகின்றானே என்று நைகின்ற ஒருவனை நோக்கி,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை'

(469)

என்றார். நன்மை செய்வதெல்லாம் நன்மையாகி விடாது; அதனை நல்லதெனக் கொள்வார்க்கே நல்லதாம்; பிறர்க்கு அல்லதாம். நீ செய்யும் நன்மைக்கும் தாம் ஒரு கற்பிப்புச் செய்து கொண்டு அது இன்ன உள் நோக்கத்தால் செய்தது என்று இட்டுக் கட்டி இழிவாகப் பேசவும் இடருண்டாக்கவும் முனைவர். ஆதலால் செய்யப்பட்டவர் தன்மையைப் பொறுத்தே நல்லதும் அல்லதும் கொள்ளப்படும் எனத் தெளிந்து தேர்ந்து செய்; இப்பண்பாட்டை இன்னொருகால் அடையமாட்டாய் என்கிறார்.

காலமும் பயனும்

எனக்குப் புரிவு தெரியா நாளில் என் காப்பாளராக அவர் இருந்தார்; எனக்குக் காப்பாளராக இருந்தது போலவே என் உடைமைக்கும் அவரே காப்பாளராக இருந்தார். அக்கால நிலையில் ஓரளவு படிக்கவும் வைத்தார். பின்னே என் கடிய உழைப்பாலும் முயற்சியாலும் வளர்ந்த நிலையில் என்