உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

231

எவரிடத்தும் இனிக்க இனிக்க உரையாடுங்கள்; உறவாடுங்கள்; இன்சொல் சொல்லவும் முகம் மலர்ந்து விளங்கவும் என்ன பஞ்சமா? அவற்றைச் செய்தால் உங்களைத் துன்புறுத்தும் பட்டுணி உங்களை அண்டவே அண்டாது என்று வற்றா வளநெறி ஈதென வகுத்துக் காட்டுகிறார்.

எமக்குத் தாங்குதலாய் இருப்பார் எவரும் இலரே; ஆற்றுவார் தேற்றுவார் இலரே என்று தவிப்பாரை நோக்கி, "மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு”

என ஒளி வழி காட்டுகிறார்.

19

(106)

குற்றமற்ற நல்லவர் நட்பை என்றும் மறவாதீர்; உங்கள் துன்பத்தில் துணையாக நின்றவர்களை என்றும் விட்டு விலகாதீர். இவற்றை நீங்கள் கடைப்பிடியாகக் கொண்டால் அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் மறப்பும் துறப்புமே உங்கள் துயருக்குக் காரணமாக அமைந்தவை எனத் தெளிவுறுத்துகிறார்.

எவரும் ஏற்பர்

எவ்வளவோ சொன்னேன், எப்படி எப்படியெல்லாமோ சொன்னேன்; எவரும் கேட்பாரில்லை என்பவரைப் பார்த்துத் திருவள்ளுவர்,தம் பட்டறிவும் பாசமும் கொண்டு கூறுகின்றார்:

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்"

(648)

"எவரும் கேட்கவில்லை என்கிறாயே! எவரும் என்ன, உலகமே உன் சொல் கேட்கும்; நீ சொல்லும் வகையில் சொல்ல வேண்டும். சொன்னால் கேட்கும்" என்றார்,

"சொல்லும் வகை எப்படி?" என்பதை அறிந்து கொள்ள விரும்பி ஏறிட்டுப் பார்த்தான் அவன்; வள்ளுவர் கூறினார்.

"சொல்பவன் வேறு கேட்பவன் வேறு என்று இல்லாமல் இருவரும் ஒத்த நிலையராகிய உரிமை கொண்டு விட வேண்டும்; அந்நிலையில் கேட்பதற்கும் இனிமையமைய, இதனைச் சொல்லும் முறை இதுவே எனக் கேட்டவர் வியக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால் உடனே சொன்னதை நிறைவேற்றுவார்" என்றார்.