உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

பழிப்புரை

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

என்னில் தாழ்ந்தவரும், பண்பு குறைந்தவரும் கூட என்னைக் குறை கூறுகின்றனரே அவர்களுக்கு நான் எவ்வளவு மேம்பட்டவன் என்று குறை சொல்பவரைக் குறைகண்டு வருந்துவார் உளர். அத்தகையவரை நோக்கி, நீ அவன் சொல்லிய குறையையும் அவன் குறையையும் பார்த்துத் தானே இப்படிச் சொல்கிறாய். உன் தகுதி என்ன, உன் செயல் அதற்குத் தக்கது தானா, என்று நீ எண்ணிப் பார்க்க வேண்டும் அல்லவோ? உன் தகுதிக்கும் செயலுக்கும் உள்ள பொருந்தாமையைக் கண்டு, அவன் உன்னைக் குறை கூறினானே அல்லாமல் உனக்கும் அவன் மேம்பட்டாளன் என்னும் செருக்கில் கூறினான் அல்லன் என்று கொள்ள வேண்டும் அல்லவோ என்கிறார்.

கேடு

"எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு"

(470)

என்னை நன்றாக நோட்ட மிட்டிருக்கிறான்; என் விருப்பு வெறுப்பு சொல் செயல் என்பவற்றையெல்லாம் உள் வைத்து நோக்கியிருக்கிறான்; சரியான வேளை கண்டு கண்டு என்னை வீழ்த்திவிட்டான்; தலை நிமிரா வகையில் கெடுத்து விட்டான் என்று தன்னிலைக்கு இரங்குவாரைப் பார்த்து

66

“காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்'

என ஓர் ஒளி காட்டுகிறார்.

(440)

"ஒருவன் தான் விரும்பும் விருப்பத்தைப் பிறர் அறியாமல் துய்த்து நிறைவேற்றிக் கொள்ள வல்லவனாயின் அவனுக்குப் பகையாயவர் வகுக்கும் சூழ்ச்சி எதுவும் வெற்றி பெறாது" என்பது இது

இல்லையா? உண்டே!

ஊணுக்கும் வழியில்லை உறவுக்கும் வகையில்லை என்று தமக்குள் தாமே நோவாரைக் கண்டு,

"துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு"

என்று தேற்றுகிறார்.

(94)