உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் ஓ "ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்

229

உரனுடைய நோன்பகடு"

என்னும்,

“அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய

பண்டைச் சாகாட்ட டாழ்ச்சி சொல்லிய வரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகடு”

என்றும் வரும் புறநானூற்றுச் செய்திகள் (60; 90) இவண் எண்ணத் தக்கன.

இவற்றால் வறுமை முதலாம் தடங்கல்கள் முயற்சியும் ஊக்கமும் உடையவனுக்குத் தடங்கல்கள் ஆகமாட்டா என்றும், அவற்றையெல்லாம் மிதியடியாகக் கொண்டு மேலே ஏறி மலை மேல் சுடரும் கதிரோனாக அவன் திகழ்வான் என்றும் நம்பிக்கையூட்டுகிறார் திருவள்ளுவர். சுடச்சுட ஒளி செய்கிறதே பொன். அச்சுடு அதன் மாசினைப் போக்கி மேலும் ஒளிவிடத்தானே செய்கின்றது. அவ்வாறே ஒருவனை வாட்டும் வறுமை முதலிய துன்பங்கள் எல்லாம் அவனை ஒளிவிடச் செய்வனவே யாம்.

“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு”

பெருமையும் சிறுமையும்

(267)

பொன்னைத் தேய்த்து மாற்றுக் காண்பதற்கு ஒருகல் உண்டே! அது கட்டளைக் கல் என்பது. அக் கல் தன்னில் தேய்க்கப் பட்ட பொன்னின் மாற்றுகளை உயர்வு தாழ்வு இல்லாமல் உள்ளது உள்ளபடி காட்டும். அதுபோல் ஒருவன் பெருமையும் சிறுமையும் பிறர் சொல்லும் புகழ் பழிகளில் ஆவனவும் நிற்பனவும் அல்ல. அவன் செய்யும் செயல்களா லேயே அமைவன என்று 'நீயே நின் மதிப்பீட்டாளன்' என்கிறார்.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்'

55

(505)