உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

உண்டா?

ஊக்கத்தைத் தடுத்து நிறுத்த ஒரு தடை இல்லை! என்பதைக் காட்சியாகக் காட்டுகிறார் வள்ளுவர்.

"பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்'

என்பது அக்காட்சி.

(599)

இன்பத்தை விரும்பமாட்டான்; துன்பம் வருதல் இயற்கை என்று கொள்வான். இத்தகையனுக்குத் துன்பம் ஒன்றும் உண்டோ?

துன்பத்திற்கே துன்பம் ஊட்டவல்ல துணிவினர்க்கு துன்பம் என்பதொன்றும் உண்டோ?

அடுக்கடுக்காகத் துன்பம் வந்தால் என்ன,

வெள்ளப் பெருக்கே போலத் துன்பம் வந்தால் தான் என்ன, ஊக்கமுடையவனை அவை என்ன செய்ய முடியும்?

நீரின் அழம் எவ்வளவு அவ்வளவு நீளம் உடையது நீர்ப் பூவின் தண்டு.நீரின் அளவுக்கு ஏறி ஏறி உயர்ந்தே நிற்கும் அது. அது போல் ஒருவன் உள்ளத்தின் அளவுக்கே அவன் உயர்வும் அமைந்திருக்கும் என்றெல்லாம் ஊக்கச் சிறப்பைக் கூறும் வள்ளுவர் காளை ஒன்றன் காட்சியைக் காட்டுகிறார்.

"மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து"

என்பது அது.

(624)

வண்டியில் பூட்டப் பட்ட வலிய காளைக்கு மேடென்ன பள்ளமென்ன? மலையடிக் கல்லாஞ்சரளை என்றால் என்ன? தன் காலிலும் வண்டிக் காலிலும் ஏற்றுண்டு துள்ளிச் செல்ல இழுத்துக்கொண்டு போவது இல்லையா?

மணலும் சேறும் நீரும் அமைந்த ஓடையிலும் ஆற்றிலும் வண்டிச் சக்கரம் அழுந்தித் தெப்பக் கட்டை அளவுக்கு ஆழ்ந்து சென்றாலும், முன்னங்கால்களை ஊன்றி மண்டியிட்டு, தலையை நிமிர்த்தி, கொம்பை உயர்த்தி, காதை விடைத்து நுகக் கோலை இழுத்து மேடேறும் மாட்டைக் காண்பார்க்கு வாழ்வில் ஏற்படும் தடை எதுவும் தடையாமோ? தடை உண்டு எனின் தடந்தோள் உண்டு" என்று வீறு காட்டி வெற்றி கொள்வதன்றோ வாழ்வு?