உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

227

கொள்ளவும் செய்யாது; வசை கூறவும் செய்யாது. ஆனால் அறிவில்லாமையையே உலகம் வசைகூ கூறும்.

'அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையாது உலகு

55

(841)

அறிவின்மைதான் இன்மையே அன்றிப் பிறிதின்மை இன்மை ஆகாது என்ற திருவள்ளுவர்,

"அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்"

என்கிறார்.

ஊக்கமுடைமை

(430)

அதனினும் ஒருபடி மேலே போய், பொளுடைமை ஆகட்டும், அறிவுடைமை ஆகட்டும் பிறபிற உடைமைகள் ஆகட்டும்; அவையெல்லாம் ஊக்கமுடைமைபோல் ஆகுமா என்கிறார்.

“உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார்

உடையது உடையரோ மற்று'

(591)

“உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்"

(592)

ஒருவந்தம் கைத்துடை யார்.

(593)

“ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

என்றெல்லாம் ஊக்கம் என்னும் செல்வத்தை உரைக்கிறார்.

தேடிய செல்வம் எத்தனை எனினும் இழக்கலாம். தேடிக் கொள்ளவும் செய்யலாம். ஆனால் ஊக்கம் என்னும் செல்வம் ஒன்றனை மட்டும் இழந்துவிடுதல் ஆகாது என உரமூட்டுகிறார்.

யானை எவ்வளவு பெரிய விலங்கு?

அவ்வளவு பெரியதா புலி?

யானைக்கு இருக்கும் தந்தம் எவ்வளவு வலியது? ஆனால் புலிக்கு அப்படித் தந்தம் உண்டா?

பரிய தேக்குத் தடிகளையும் இழுக்கும் வலிமையமைந்த யானை, புலியைப் பார்த்த அளவிலே அஞ்சிப் பின் வாங்குவது ஏன்?