உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|226

இளங்குமரனார் தமிழ்வளம் - 39 பசிக்கொலையால் இறந்துபடாமல் காத்தலை,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’

(332)

என மேம்பட்ட கடனாகக் குறிக்கிறார். இக்குறளுக்கு எனவே வாழ்ந்து காட்டிய இலக்கியப் பிறவி வள்ளலார் பெருமான் என்பது நாடறிந்த செய்தி.

வறுமைக் கொடுமையை ஒழித்து ஒப்புரவாக்க உரத்த ஒலி எழுப்பும் வள்ளுவர், அவ்வறுமையையும் சுட்டக்காட்டத் தவறவில்லை.

வறுமையிலும் நன்மை ஒன்று உண்டு; அஃது யாது எனின்; மெய்யான உறவினர் இவர் என்பதை அளவு செய்து கொள் வதற்கு அவ்வறுமைப் பொழுது உதவுகின்றது என்கிறார். அது

“கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்"

(796)

என்பதும் செல்வமும் வாய்ப்பும் பதவியும் இருக்கும்போது இருந்து, அவை ஓடும்போது தாமும் ஓடும் இயல்பினரை அப்பொழுரில் தானே கண்டு கொள்ள முடியும்? அந்த வாய்ப்புப் பேறாக வறுமைப் பொழுதினைக் கருதலாமே! என்கிறார்.

வறுமையிலும் வறுமை உண்டு; அது, செல்வமுடை மையாம். அச் செல்வமுடைமை அறநெறி பேணா அரசின் கீழ் பெருந்துயர்க்கே இடஞ்செய்வதாய் இருக்கும். இதற்கு வறுமை எவ்வளவோ மேலானது அல்லவா என்கிறார்.

"இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்”

(558)

இன்னும் நல்லவர்கள்பட்ட வறுமையினும் கொடுமை யானது அல்லவர்கள் அடைந்த செல்வம் என்றும் கூறுகிறார்.

“நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கட் பட்ட திரு"

(408)

இன்மையின் இன்மையே இன்னாதது என்றாலும், அதனினும் இன்னதாதும் உண்டு. அஃது என்னவென்றால் அறிவின்மை ஆகும். செல்வம் இல்லாமையை உலகம் இல்லாமையாகக்