உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

225

தீமைகளுக்கு இடையேயும் அவர் ஒருகால் செய்த நன்மை காலத்தினால் செய்ததாகவும், பயன் கருதாமல் செய்ததாகவும் இருந்து உன்வாழ்வுக்கும் உயர்வுக்கும் அடிப்படையாகக் கூட இருந்திருக்கலாமே! அவற்றை ஒருநொடிப் பொழுதளவு எண்ணினால் கூட, உன் கொலை எண்ணம் பொடிப் பொடியாக உதிர்ந்து போகுமே!" என்கிறார்.

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்"

வறுமை

(109)

இனிச் சிலர் தாம் பெற்ற வறுமையை நினைந்து நினைந்து நைகின்றனர். வறுமையை இன்மை, நல்குரவு, நிரப்பு, துப்புர வின்மை என்னும் நான்கு வகைகளில் ஆள்கிறார் (அதிகாரம், நல்குரவு) வள்ளுவர். இவற்றுள் வறுமையும் இன்மையும் ஒரு பொருளன. நல்குரவு என்பது கொடுக்கப்பட்ட வலிமை என்னும் பொருளது. நிரப்பு என்பது நிரம்பிய நலம் செய்வது என்னும் பொருளது. துப்புரவின்மை என்பது உண்ணுதற்கு வகையில்லா நிலை என்றும் வலிமை குன்று நிலை என்று பொருள் தருவன.

இவற்றை மேலோட்டமாகப் பார்த்த அளவில்கூட கொடிய வறுமையில் கூட நலப்பாடாம் பகுதியும் உண்டு என்பது விளங்கும்.

"நெருப்பினுள் உறங்கினாலும் கூட நிரப்பினுள் கண்ணை மூடுதற்கும் இயலாது" என்றும் (1049),

"நேற்றுக் கொன்று விட்டுச் சென்ற நிரப்பு இன்றும் வருமோ என்றும் (1048),

"வறுமையிற் கொடியது எது என்னின் அவ்வறுமையிற் கொடியது அவ்வறுமையே" என்றும் (1041),

வறுமைக் கொடுமையை உருகி உருகிக் கூறுகிறார் வள்ளுவர்.

வறியவர்க்குக் கொடுக்கும் கொடையே கொடை பிறர்க்குக் கொடுப்பது கைம்மாற்றுப் போல்வதும் உடன் போல்வதும் என்றும் கூறுகிறார் (221).

வறியவர் பசித்துயரை அழிபசி என்றும் (226), பசியென்னும் தீப்பிணி என்றும் (227) அவர்க்குத் தருவதே ஈத்துவக்கும் இன்பம் என்றும் (228) கூறுகிறார்.