உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

என்றும் கூறினார்.

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

சிவப்பு விளக்குப் போட்டு நிறுத்தி, பச்சை விளக்குப் போட்டுப்போ என வழிப்படுத்தும் காவல் கடமையர் போல வள்ளுவத் தோன்றல் களவுக் கயமையைச் சுட்டிக் காட்டி ஒழுங்கு படுத்துதலை உணர்வார் பிறர் பொருளைக் கவர விரும்புவரா?

“சொல்லப் பயன்படுவர் சான்றோர்

என்று கருதி உரைக்கும் உரையைக் கேளாமல்,

"கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்

(1078)

என ஆவேன் என்பாரை அழிவு ஆட்கொள்வதை அன்றி அறம் ஆட்கொள்ளுமா?

கொலை

இயற்கையாகத் தோன்றிய உயிர், இயற்கையாக உடலில் இருந்து விடுபடுதலே நேரியமுறை, தன்னைத் தானே அழிப்பா தாயினும், பிறிதுயிரை அழிப்பதாயினும் முறையன்றாம். ஆக்க முடியாத உயிரைப் போக்குதல் முறைமை என எவரும் கொள்வரா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றுக்கும் அவ்வவரின் உயிரும் அவ்வவற்றின் உயிரும் இனியனவே. அவ்வாறாகவும் அவ்வினிய உயிரைப் போக்குதல் கொடுஞ்செயல் அல்லவோ! அதனால், தன் உயிரை இழக்கின்ற ஒரு நெருக்கடியான நிலையில்

கூட, பிறவுயிரைக் கொல்லும் செயலை மேற்

கொள்ளல் ஆகாது! தன்னுயிரைக் காக்க வேண்டும் என்று பிறிதொன்றின் இனிய உயிரைக் கொல்லலாமா? என்கிறார்.

<<

“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை"

(327)

பிறிதொருவர் தமக்குத் தீங்கு செய்தார் என்று கறுவிக் கொண்டு அவரைக் கொல்லத் திரிவானுக்குச் சொல்கிறார்.

அப்பா,உனக்கு ஒருவர் கொடுமை செய்தார் என்றும், அவரைக் கொன்றொழித்தல் வேண்டும் என்றும் முனைப்பாக, உள்ளாயே! அவர் உனக்கு எந்த நாளிலேனும் எந்த அளவிலே னும் நன்மை செய்தவர் இலரா? அவர் செய்த தீமையையே நி னைக்கும் நீ அவர் செய்த நன்மை உண்டாயின் அதனை எண்ணிப் பார்த்தல் கடமை அல்லவா! அவர் செய்த பல