உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குடும்பவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும்

சிற்றூர்களில் 'தலைக் கட்டு வரி' என்றும் 'குடும்பவரி என்றும் வழங்கும் வழக்குகள் இன்றும் உள்ளன. பொங்கல் விழா, கோயில் விழா, ஊர்ப் பொதுக் கடமை ஆகியவற்றுக்குத் தலைக் கட்டு வரி அல்லது குடும்ப வரி என்று அளவிட்டு வாங்குவர். அத்தலைக் கட்டு அல்லது குடும்ப அளவு, கணவன் மனைவி மக்கள் என்னும் முத்திறத்தர் அமைந்த அளவே ஆகும். மக்கள் இல்லை எனினும் கணவன் மனைவியர் கொண்ட குடும்பமும் ஒரு தலைக் கட்டேயாம். ஆதலால் ஒரு பெருங்கூட்டுக் குடும்பத்தில் மிகப் பலர் இருப்பினும் அவரெல்லாம் ஒரு குடும்பம் எனக் கொள்ளக் பட்டிலர். குடும்பத் தொகுதியே அக் கூட்டுக் குடும்பமாகும்.

கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பம் என்பது அண்மைக் காலம் வரை தமிழகத்தில் நடைமுறைப்பட்டதாகவே இருந்தது. இந்நாளிலும் முற்றாக அவை ஒழிந்து விடவில்லை. இன்றும் முதியோர் தம் குடும்பத் பிரிந்து போதலை விரும்பாதவராக இருத்தலும் காணக் கூடிய செய்தியே.

நூற்றுக் கணக்கானோர் உள்ள ஒரு பெருங்குடும்பத்தை அறிவேன். அக்குடும்பத்தவர் சொத்துப் பிரிவினை செய்வது இல்லை. தனியே போக வேண்டும் எனக் கருதினால் போய் விடலாம்; ஆனால் சொத்தில் எப்பங்கும் கொண்டாட முடியாது. மீண்டும் பொதுக் குடும்பத்திற்கு வரவேண்டும் எனினும் தடையின்றி வந்து விடலாம்.

சமையல் பொதுவாக நடைபெறும். அவரவர்க்கு வேண்டுமளவு சோறு கறி வகைகளை எடுத்துக் கொண்டு போய் அவரவர்க்குள்ள தனி வீட்டில் வைத்து உண்ணலாம்.அங்கேயே தங்கிக் கொள்ளலாம். எல்லா வேலைகளும் பொது; எல்லா வருமானங்களும் பொது; எல்லாச் செலவுகளும் பொது;