உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

குடும்பத்தில் மூத்தோர் எவரோ அவர் தலைமையில் குடுமபம் நடைபெறும்.

இத்தகு குடும்பம் 'கடும்பு' என வழங்கப்பட்டது எனச் சங்க இலக்கியங்களின் வழியே அறிய வாய்க்கின்றது. வள்ளுவர் குடும்பம், குடி என்னும் சொற்களை வழங்கியுள்ளார். குடும்பம் என்பது ஒரோ ஓர் இடத்தே தான் ஆளப்பட்டுளது. அது,

"இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு.”

என்பது.

"குடும்பத்திற்குக் குற்றம் வராமல் அகற்றுவதற்கு முயல்பவன் உடல் துன்பம் என்னும் பொருளுக்கே கொள்கலமாக (இருப்பிடமாக) அமைவதோ? (இல்லை)" என்கிறது அது.

குடி என்பது குடும்பம் என்னும் பொருளில் பதினெட்டு டங்களில் ஆளப்பட்டுள. அவ்விடங்களுள் ஆன்ற குடி (அகன்ற குடி) என்னும் ஆட்சி மூவிடங்களில் உண்டு. அவை கடும்பு என்பது போலும் கூட்டுக் குடும்பக் குறிப்பு ஆகலாம் (687,

992, 1022).

உட்பகை

குடும்ப நலங்காத்தலை அழுத்தமாகக் கூற விரும்பும் வள்ளுவர் 'உட்பகை' என்னும் அதிகாரத்தில் அதனை மிக வலியுறுத்துகிறார்.

நாடு நலம்பெற உட்பகை ஆகாமையே போல, வீடு விளங் கவும் உட்பகை ஆகாது என்பதைப் பல்கால் வற்புறுத்துகிறார்.

"உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்

.99

நெருங்கிய உறவு முறையினால் ஒருவனுக்கு

(885)

உட்பகை

தோன்றினால் அஃது அவனுக்கு இறக்கும் முறையால் துன்பம்

பலவற்றைத் தரும்.

"ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது’

""

(886)

நெருங்கியவர்களிடத்து நெருங்காத உட்பகை உண்டாயின் அழியாதிருத்தல் அமைதல் எப்பொழுதும் இல்லை.