உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி

(887)

239

செப்புச் சிமிழும் மூடியும் கூடி ஒன்றே போல் பொருந்தி யிருந்தாலும் ஒன்றாகாது! அது போல் உட்பகை கொண்ட குடியும் ஒன்று போல் பொருந்தியிருந்தாலும் ஒன்றாகாது.

“அரம் பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி

(888)

உட்பகை உண்டான குடி அரத்தினால் அராவப்பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.

66

“எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் உட்பகை உள்ளதாம் கேடு"

(889)

எள்ளின் பிளவினை ஒத்த சிறிதளவே பிளவு உடையது எனினும் உட்பகை (ஒரு குடியை) அழித்துவிடும் கேடு உடைதாகும்.

"உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடனுறைந் தற்று'

""

(890)

உள்ளத்தால் ஒன்றுபடாதவர் ஓரிடத்துக் கூடி வாழும் வாழ்கை, ஒரு சிறு குடிசையில் பாம்புடன் கூடி வாழ்வது போன்றது.

முன்னைந்து பாடல்களின் கருத்தின் முடிந்த முதிர்நிலை போல இறுதிப் பாடல் இருத்தல் "உடம்பாடு இலாதவர் குடும்ப வாழ்வு இத்தகைத்து' எனக் குறித்துக் காட்டுவதாகும்.

உட்பகைத் தீர்வு

உறவு முறைக்குள்ளாக உட்பகை தோன்றின் முழுதழிவே என்றும்; ஒரு குடிப்பிறந்து ஒன்றுபட நிற்கத்தக்கார் ஒன்று படாமல் இருப்பின் பேரழிவை ஏன்றும். வெளிப்பார்வைக்கு ஒன்றே போலத் தெரியும் செப்பும் மூடியும் போலச் செறிவாகத் தோன்றினாலும் பிரிவு பிரிவே என்றும், வலிய இரும்பும் அரத்தால் சிறிது சிறிதாக அராவப்பட்டுத் தேய்த்து இற்று ஒடிந்து போவது போல உட்பகை உள்ள குடியும் அழியும் என்றும். எள்ளின் பிளவே போலச் சிறிய பிளவு உண்டாயினும் குடி அழிந்துபடும் என்றும் உட்பகைக் கேட்டைக் பல்கால் வற்புறுத்திக் கூறிய குடிப்பாங்கு அறிந்தார், உடம்பாடு இலாக் தன்மை கொள்ளார். அப்படிக் கொண்டார் வாழ்வு, எப்பொழுது