உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

தீண்டுவார், நச்சைக் கக்குவார் என்பதைத் தெரியாமல் அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வினராகவே வாழ்வர். இவ்வாழ்வர் குடிக்கு நலம் தரும் செயலையோ தொழிலையோ முழுமையாக ஈடுபட்டுச் செய்வாரா? தற்காப்புக்கே காலம் எல்லாம் செலவிடும் வாழ்வர், பிறர் காப்புக்கும் பிறர் நலத்துக்கும் பொதுக் குடும்ப வளர்ச்சிக்கும் பாடுபடுவரா?

ஒருவர் நாடித் துடிப்புப் போல் மற்றொருவர் நாடித் துடிப்பும் உள்ளதா? அதிலே விரைவுத் துடிப்பும் மெல்லத் துடிப்பும் இல்லையா?

பொறியால் இயங்கும் கடிகாரம் ஒன்றைப் போல் ஒன்று, காலம் காட்டவோ செய்கின்றது? அதில் விரைவோட்டமும் மெதுவொட்டமும் இல்லையா?

ஒவ்வொருவருக்கும் தாம் பிறந்த குடிப்பிறப்பு, சூழ்நிலை, கல்விநிலை, தொழில் நிலை ஆகியவற்றால் ஏற்ற மாற்றங்கள் அமைத்தானே செய்யும்?

ஒரு தோட்டத்துக் காய்கறிச் செடிகளோ, ஒரு தோப்புக் கனி மரங்களோ, ஒரு விளை நிலத்துப் பயிர்களோ ஒத்த வளர்ச்சியும் ஒத்த பயனும் தரவோ செய்கின்றன?

இவற்றைக் கண்ணேரில் காண்பார், "என் எண்ணம் போலவே அவரும் எண்ண வேண்டும்" என்றும்,"என் செயல் போலவே அவரும் செய்ய வேண்டும்" என்றும் எண்ணிக் கொண்டு செயல்படலாமா?

ஒரு தாய் வயிற்றின் இரட்டைப் பிறப்பிகளுள் கூட இயல் செயல் உணர்வு அறிவுகளில் வேறுபாடு இல்லையா?

முதிர் பேரறிவு இரட்டையராக விளங்கிய ஆர்க்காடு இராமசாமி, இலக்குமணசாமி என்பார் ஒரு துறைப்பற்று மையிலோ இயங்கினர்.

உலகின் வியப்பு இரட்டையராகிய சயாமிய இரட்டையர் உடல் ஒட்டியே பிறந்தனர்; அவ்வுடல் ஒட்டை அகற்றின், உயிர்க்கு கேடாம் என அப்படியே வளர்ந்தனர் மணமும் கொண்டனர். ஆயினும் அவர்கள் உணர்வுகளிலே எத்தனையோ மாற்றங்கள் உண்டென்பதை வரலாற்றுலகம் சுட்டுகின்றதே. இவற்றையெல்லாம் எண்ணுவார் குடிநலம் கருதிப் பிறர் உணர்வை மதித்துப் போற்றுதல் வேண்டும். வேற்றுமையுள் ஒற்றுமை கண்டு ஒத்துப் போகக் கற்றுக் கொண்ண வேண்டும்.