உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

மிக்க பெற்றோர்

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் 'பிள்ளைகளே' என அக்கறை வழக்காடவும் கூடும். பொறுப்பு பிள்ளைகளைச் சேர்ந்ததா? பெற்றோர்களைச் சேர்ந்ததா? எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும்; எண்ணி அலமருவார் பெற்றோரா பிள்ளைகளா என்பதைத் தெரியவே புரியுமே!

பள்ளிக்கும் கல்லூரிக்கும் ஒழுங்காகச் செல்லாமை. சென்றாலும் முறையாகக் கல்லாமை, கற்றாலும் ஒழுக்கத்தில் நில்லாமை என்பன வெல்லாம் தக்கார் இனத்தொடு

சேராமையின் விளைவேயாம்.

எத்தகைய பண்பாடுடைய குடிப்பிறப்புப் பேறுடைய கல்விச் சீருடைய குடும்பத்து இளையரும், பொற் பொடி, மயக்கு ஊசி, குடியாட்டு, களியாட்டு, தீயபாலுறவு என்பனவற்றில் தலைப்பட்டும் நிலைப்பட்டும் மீளா அடிமையராய் இருக்க அடிப்படை, தக்கார் இனத்தொடு சேராக் குறையின் பயனேயாம்.

“தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்”

என்கிறார் வள்ளுவர்.

(446)

தக்கார் இனத்தொடு வாழ்ந்தானா? அவனை எத்தகு கேடனும் கெடுத்து விட முடியாது. ஏன்? தக்கார் என்னும் பாதுகாப்பு அரணை அவன் பெற்றிருக்கிறான் அல்லனோ என்கிறார் வள்ளுவர். அதன் எதிரிடை என்ன?

தக்கார் இனத்தொடு வாழானுக்குக் கேடு செய்வார் எவரும் வேண்டுமோ? கேடு செய்வார் இன்றியே அவன் சேர்ந்த தகாத இனச் சார்பிலேயே கெட்டொழிவான் என்பதை நினைவூட்டுகிறார்.

நேரிடை வாய்ப்பாகவும் எதிரிடை எச்சரிக்கையாகவும் இவற்றைக் கூறுவது தானே பெரியாரைத் துணைக் கோடலும் சிற்றினம் சேராமையும்!

சூழ்நிலைச் சிக்கல் தீர்வு

அறனறிந்து மூத்த அறிவுடையவர் உறவைக் கொள்க. (441) உற்ற துயர் நீக்கி உறாமல் காக்க வல்லாரைச் சேர்க. (442)

இடித்துக் கூறும் பெரியவர் துணை இல்லான் கெடுப்பார் இன்றியும் தானே கெட்டுப் போவான்.

(448)