உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

மெல்லாம் ஆடவிட்டு இறுதியில் 'அம்மோ' என்று என்ன ஆகும்? 'ஐயோ' என்று என்ன ஆகும்?

பெருக்கெடுக்கும் வெள்ளத்திற்கு அணையைக் கட்டி, காலை ஆக்கி, வாய்க்காலை ஆக்கி, ஏரி குளங்கள் மடை கலிங்கல் (மதகு) என்பவை அமைத்து வளம் காணுவது உழவப் பண்பாடு; ஆனால், அது பெருக்கெடுக்கும் இளமை உள்ளத்திற்கு அணையும் காலும் வாய்க்காலும் பிறவும் அமைக்காது வாளா விட்டு விடுதல் பெருங்கேடு என்பதை உணர வேண்டும் அல்லவோ?

பருவம் அறிந்து உழுது பொடியாக்கி பாத்திகட்டி விதைத்து நட்டு நீர்ப்பாய்ச்சிகளை வெட்டி காவல் காத்து நோய் நொடி நீக்கி விளைவு காணும் விழுமியது உழவப் பயிர்க் காவல் பாங்கு; ஆனால், அது வாழும் உயிர்க்காவல் பாங்கை பற்றிக் கவலைப்படாமல் விட்ட குறை காலமெல்லாம் கவலைப்பட ஆக்கியமை அல்லவோ கண்கூடு!

"பயிர்பாராமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது" என்னும் பழமொழியைப் பயில வழங்கும் மண், வளப் பயிராம் இளையரைப் பாராமலும் கேளாமலும் விட்ட குறை என்ன ஆயிற்று?

ஒத்த பருவத்தைத் தேடி ஓட வைத்தது; பொருந்தா இயல்புடைய ஒத்த பருவத்தை ஒட்டித், திருந்தா இயல்புக்கு ரையானது!

கொஞ்சிக் குலவிய குழந்தை விட்டுப் பிரியாமல் கட்டிலில் கிடந்த குழந்தை சிறிதே வளர்ந்த நிலையில் பெற்றோரை விட்டு வெளியே ஓடுவானேன்?

-

குழந்தைக்குத் தக்க குழந்தையாக மாறி இருந்த பெற்றோர் இளையருக்குத் தக்க இளையராக மாறி இருக்கவில்லை. அவர்கள் பெரியராக மதிப்புப் பெறவும் ஆணை இடவும் உரியவராக, வளர்ந்த நிலையில் இருந்து கொண்டு இளையரை நோக்கினர். இடைவெளி விழுந்தது. "என் பையன் என்முன் தலைநிமிர்ந்து பேசவும் மாட்டான்; வீட்டில் நானிருப்பது தெரிந்தால் ஊமையாகி விடுவான்; அடக்க ஒடுக்க மென்றால் அப்படி அடக்க ஒடுக்கம்” எனப் பாராட்டிக் கொண்டோம். அவன் இக்கட்டுப் பாடான இக்கட்டுக்கு ஈடு செய்ய வெளி யாட்டம் போட நேர்ந்து விட்டது. இந்நேர்ச்சிக்கு வித்தானவர் பெற்றோர்களே!