உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

249

செல்லவும் செய்து விடுகின்றன. இந்நிலை வள்ளுவம் கருதிக் கூறுவது போல்,

“தம் பொருள் என்பதம் மக்கள்'

என எண்ணும் பெற்றோராய்,

மக்களை

பெற்றோராய்,

"அவையத்து முந்தியிருக்கச்" செய்யும்

மக்களைச் 'சான்றோர்' எனப் பிறர் புகழக்கேட்கு

மாறுள்ள பெற்றோராய்,

பழிக்கு அஞ்சிப் பகுத்துண்ணும் வழிகாட்டிப் பெற்றோராய் அமைந்து விடின்,

இவர் பெற்றோர் இவரைப் பெற என்ன பேறு பெற்றனரோ" எனப் போற்றும் அறிவறிந்த மக்களால் அன்பும் அறனும் விளங்கும் இல்வாழ்க்கை அமைந்து, இழுக்குறாத வாழவாய்ச் சிறக்கும்.

குழந்தையர் சூழ்நிலைச் சிக்கல்

குழந்தையின் மழலை மொழியில் மகிழ்ந்த பெற்றோர் அவையத்து முந்தியிருக்கச் செய்யும் கடனை மேற்கொள்வது வேண்டுவதேன்? அதுவே, அவனை அல்லது அவளைச் சான்றாண்மையுடையராகச் செய்யும் செயல் என்பதைக் கொண்டே வலியுறுத்தினார் வள்ளுவர்.

"மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து

என்னும் அருமைக் குறளை எண்ணுவார் தம் மக்கள் வளர்ந்து வாழவேண்டும் சூழலை எண்ணிச் செயல்படுவார். அச்செயற் பாடு இல்லாமையும் தளர்வும் ஏனோ தானோ போக்கும், இற்றை இளையோர் உலகைக் கெடுத்து வரும் கொடுமைக்கு எல்லை இல்லையாய்ச் செய்கின்றன. கல்லா இளையரினும் கற்கும் இளையரையும் கற்ற இளையரையும் கெடுக்கும் சூழல் கேடு இவ்வளவு அவ்வளவா?

மனநலம் நன்கமைந்த சான்றோர்க்கும் அம்மனநலச் சான்றோர் கூட்டுறவும் தொடர்பும் துணையும் இன்றியமையா தன என்னும் வள்ளுவப் பார்வை எங்கே? சேராத இடந்தனிலே சேர விட்டு, கூடாத வழிகளிலே கூட விட்டு, ஆடாத ஆட்ட