உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

'பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை

95

என்பது அவன் பணிமொழியன் ஆதல்.

(1258)

இருவருக்கும் ஒத்த காதல் “வீழும் இருவர்" (1108; 1191 - 3) என்பதாலும், இருவருக்கும் ஒத்த கற்பு “நிறை” திண்மை" என இருவர்க்கும் சொல்லும் சொற்களாலும் இனிது விளங்கும் (57,

864, 988, 1254)

களவிலே அரும்பிக் கற்பிலே மலர்ந்த வாழ்வு வள்ளுவ வாழ்வு, ஆதலால் அவனை அவளும், அவளை அவனும் புரிந்து கொண்டு வாழ இயல்பாக வாய்ப்பு ஏற்படுகின்றது. அதில் வழுவுண்டாயினும் அதற்குத் தம் பெற்றோர் பொறுப்பாகார் தாமே அதற்குப் பொறுப்பினர் என்னும் தெளிவு அவர்களுக்கு ஏற்பட்டுத் தாமே சிந்திக்கவும் சீர் செய்யவும் வாய்க்கும். சாதிச் சிக்கல். சமயச் சிக்கல் என்பனவும் இங்கே தலைகாட்ட இடமில்லை. ஆதலால் அவர் வாழ்வுக்கு அவரே பொறுப்பு என்னும் உறுதி உண்டாகிச் சிந்தித்துச் செயலாற்ற வாய்க்கின்றது. பெற்றோர் - மக்கள் இடைவெளிச் சிக்கல்

-

இந்நாளில் பெற்றோர்க்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி பெருகுதல் கண்கூடு. ஒட்டி உறவாடி விட்டு நீங்கா நிலைமையில் இருந்தோர்க்கு இடைவெளியும் பிரிவும் விழுவானேன். அதிலும் திருமணத்திற்குப்பின் மிகுதியும் உண்டாவானேன்?

காலமாறுதல் கருத்து மாறுதல் ஆகியவற்றைப் பெற்றோர் உணராராய்த் தம் காலத்தையே எண்ணிக் கொண்டும், தாம் கொண்ட கருத்தையே எண்ணிக் கொண்டும் கெடுபிடியாக ருப்பது வளரும் பருவத்தார்க்கு ஒத்துச் செல்வதில்லை. டைவெளிபட்டுப் பிளவும் பிரிவும் நேர்ந்து

அதனால் விடுகின்றன.

தாம் விரும்பும் துணையைத் தேர்ந்து கொள்ள உரிமை இல்லாமை, தாம் கருதியபடி தம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் இல்லாமை, தம் பெற்றோரொடு தான் ஒத்துப் போனாலும் தன் முணை ஒத்துப் போகாமை, தன்னைத் தன் பெற்றோர் ஒத்துப் போகும் அளவு தன் துணையொடும் ஒத்துப் போகாமை என்பனவெல்லாம் இவ்விடைவெளி உண்டாகவும் வளரவும், கூடியிருக்க இயலாமல் பிரிந்து