உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

247

என்பவற்றில் அவளே அவனைத் துணை என்று கூறியதை எண்ணிப் பாராததும் என்ன?

துணையும் இணையும் பிணையும் ஒப்புப் பொருளனவே. துணையடி, இணையடி என்பவற்றையும் பிணைப்பு என்பதை யும் எண்ணிப் பார்ப்பவர் இவற்றில் உயர்வு தாழ்வு கருதார். துணைநலம் பெரியாரைத் துணைக்கோடல் என்பவற்றில் வரும் துணைக்குத் தாழ்வும் உண்டோ?

-

தலைவர், துணைத் தலைவர்; செயலர், துணைச் செயலர்; ஆட்சியர், துணை ஆட்சியர்; விதி, துணை விதி என இந்ாள் வழங்கும் வழக்குச் சொற்களைக் கொண்டு அந்நாள் ஒப்புரிமைச் சொல்லை ஏற்றி இறக்கிக் காணல் ஆய்வியல் ஆகாதாம்.

தலைவன் தலைவி, துணைவன் துணைவி, ஒருவன் ஒருத்தி என்பனவெல்லாம் ஒப்புடைமைச் சொற்களே எனக் கொள்ளும் தெளிவினர் கணவன் உயர்வென்றும் மனைவி தாழ்வென்றும் கொள்ளார். வேண்டுமானால் “பெண்ணே பெருமை யுடைத்து என்று கொள்ளுதற்கும், ஒருமை மகளிரே போலப் பெருமை யும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு" என்று தூண்டு தற்கும் வள்ளுவம் உந்துமே அல்லாமல் தாழ்த்த இடந்தராது. வரைவின் மகளிரை உரைத்தாரே என்று கருதுவார், பிறனில் விழையாமையை வைத்ததை எண்ணாதது ஏன்?

-

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வாறு இருபாற் பொதுமையை உரைத்த ஒருவர் உலகில் எவரேனும் உளரோ? அதனைக் கண்டு வாய் திறப்பாராக.

குடும்ப வாழ்வில் ஒருவர்க்கு ஒருவர் துணையாக -ஒப்பாக உதவியாக இருக்கும் நிலை உண்டாயின் ஆடவர் பெண்டிர், அடக்கல் அடங்கல், உயர்வு தாழ்வு ஆண்டான் அடிமை என்பன உண்டோ?

அவன் பணிகின்றான் அவளை; அவள் பணிகின்றாள் அவனை; அப்பணிவும் இருபாற் பொதுமையே!

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்”

என்பது அவள் பணிமொழியள் ஆதல்.

(1121)