உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

இளங்குமரனார் தமிழ்வளம்-39

தினைத்துணையும் நன்றியையும், பனைத்துணையாக் கொள்ளுதல் நன்றியுணர்ந்தோர் கடனாக இருக்கவும், பெற்றோர் செய்த மலைத் துணை நன்றியை மறத்தல் மாண்பிறப்பி என்பதன் சான்றாகுமா?

இவற்றை யெல்லாம் நினைந்து பெற்றோரைப் பேணும் வாழ்வு பெற்றோர் உள்ளம் தளிர்க்கவே செய்யும். வளரும் மக்களுக்கும் பேரச் செல்வங்களுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்கு களாகவும் காவல் தெய்வங்களாகவுமே பெற்றோர் இருக்கவும் இது செய்யும். இற்றை நாள் முதியர் இளையர் இடை வெளிச் சிக்கல் தீர இவ்வள்ளுவமே வாய்த்த தீர்வாகும். துணை யொப்பு

இனிக் கணவனுக்கு மனைவி துணை என்றும், மனைவி கணவனுக்கு அடங்கிச் செல்லவேண்டியவள் என்றும் ஒத்த உரிமை பெண்ணுக்கு ஆணுலகம் தரவில்லை என்றும் சொல்லும் பழிகளுக்கெல்லாம் வள்ளுவம் எவ்வகையானும் இடந்தருவது இல்லை. அதன் பார்வை 'பால்' வேறுபாடு கருதாத ஒப்புரிமை உடையதாம். 'பிறப்பு ஒக்கும்' எனக் கண்ட ஒரு நூல்,பால் வேறுபாடு சுட்டுகிறது எனல், பார்வைக் குறையால் எழுந்ததே. கல்வி, கேள்வி, அறிவுடைமை, ஊக்கமுடைமை, வினை செயல் வகை இன்னவெல்லாம் மாந்தப் பொதுவெனக் கண்ட வள்ளுவம் பாலொப்புக் கண்ட பான்மைய தென்பது வெளிப்படை.

'வாழ்க்கைத் துணை நலம்' என்னும் அதிகாரத் தலைப்பில் உள்ள 'துணை', துணைவனுக்கும் துணைவிக்கும் பொதுச்சொல். அத்துணைநலம் பெண்ணைப் பற்றிக் கூறுதலால் துணை என்பது துணைவிக்கே உரியது எனக் கொண்டு விட்டனர். அவர் வாழ்க்கைத் துணை நலத்திற்கு முற்பட்டதாம் இல்வாழ்க்கையில் இல்வாழ்வான் என்பான் துணை முதலிரு பாடல்களிலும் சொல்லப் பட்டிருப்பதை எண்ணிப் பாராதது என்ன?

பின்னே,

“பணைநீங்கிப் பைந்தோடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்”

“புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

(1234)

வன்கண்ண தோநின் துணை'

(1222)