உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

253

அமையப் பெற்றோர் பார்த்துக் கொள்ளல் வேண்டும். இதனை வள்ளுவர் குறிக்கிறாரா? ஆம்! தெள்ளத் தெளிவாகக் குறிக்கிறார்.

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்”

என்பதில் குறிக்கிறார் (62)

பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெற முடியுமா? பிறக்கப் போகும் மகவின் பண்பை முன்னரே தீர்மானிப்பது எப்படி?

பழி பிறங்காப் பெற்றோராக இருந்து பண்புடைப் பெற்றோராக இருந்து அவர் வழியே பிறக்கும் குழந்தையும் அப்பழி பிறங்காமலும் பண்பு கெடாமலும் இருக்க வேண்டின் என்ன வேண்டும். அப்பெற்றோரின் இயலும் செயலும் எடுத்துக் காட்டாய்க் கண்முன் நடைமுறையில் விளங்க வேண்டும். அப்படி அமைந்தால்தான் அத்தன்மைகள் தலைமுறை தலைமுறையாகத் தவறாமல் விளங்கும். "தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்னம் கொடை வளம் ஈதேயாம். மேலும் குடிநலம் கருதும் இவ்வியல்பே குடிமையாம். குடிமை சார்ந்தே மானம். பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்பன வைக்கப்பட்டிருத்தல் எண்ணத் தக்கதாம்.

நடுவு நிலைமையும் நாணமும் குடிப்பிறந்தார்க்கே உண்டு (951). ஒழுக்கமும் வாய்மையும் போற்றுவாரும் அவரே

முகமலர்ச்சி கொடை இனியவை கூறல் இகழாமை என்பவை

(952).

குடிப்பிறப்புச் சிறப்பு {953).

என்ன கிடைப்பினும் இழிந்தவை செய்யாமையும்

(954),

என்ன இழப்பினும் பண்பில் குன்றாமையும்

(955),

(956)

வஞ்சங் கொண்டு தகுதியற்றவை செய்யாமையும்

ஆகியவை நற்குடிப் பிறப்பின் நயன்பாடுகள்.

இச்சூழல்,வளரும் பருவத்தர்க்கு வாய்த்து வருமாயின், அவர் ஏன் சிற்றினம் சேர்ந்து சிறுமைக்கு இ டமாகின்றார்?

இவற்றை எண்ணிச் செயலாற்றின் இளையோர் சிக்கல் எளிதில் தீர்த்து விடும் என்க.