உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

257

பிணக்குத் தீர்த்து இணக்கங் கொண்டனர். அதனைக் கொண்டே வாழ்வியல் இலக்கணம் வகுத்த முந்தையோர்.

“விருந்துகண் டொளித்த ஊடல்"

என்றனர்.

அவ்விருந்தினரும் வருந்தி அழைத்தால் அன்றி வாராதார் ஆவர். போட்டால் போதும் என்ற அளவில் கொள்ளாமல், மாறிப் பார்க்கும் பார்வை யெனக் குறிப்பால் அறியினும் கைந்நனையாத பான்மையர் குடும்ப நிலை அறியாமல் உண்பதே குறியாக இருப்பாரும் அல்லர். ஆதலால் அவ்விருந்தாளி எந்த எளிய குடும்பத்துக்கும் சுமையாக இரார்.

இனி, விருந்தோம்பல் என்பது பல்சுவைய பல்வகைய உணவுகளைப் படைப்பது அன்று. அவற்றைப் படைப்பதினும், முகமலர்ந்து வரவேற்றலும் இனியவை கூறலும் பெருவிருந்தா வன என்பதை அடுத்து வரும் இனியவை கூறலில் தெளிவாக்கி வழி காட்டவும் செய்கிறார் வள்ளுவர். அது,

CC

‘அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்”

(92)

என்பது அதனை மேலும் வலியுறுத்தி, அதுவே அறமென்றும் கூறுகிறார். அது

'முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்

என்பது. ஆதலால் இடுக்கண் அழியாமையில்,

CC

'அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றாத வர்'

என்றார்.

"பொருள்தேடி

வைத்துள்ளோம்.

இதனைப்போக

விடாமல் காத்துக் கொள்வோம் என்பதைப் பற்றிக் கவலைப் படாதவர் அப்பொருள் இல்லேம் என்று அல்லல்படுவரோ? என்பது இதன் பொருள்.

பத்துவகைக் கறியொடு பாலமுதொடு படைப்பதுதான் விருந்தென எவர் கூறினார்? பொங்கிப் பொறித்துக் கெட்டுப் போகுமாறு எவர் கூறினார்? இன்ன உணவு, இத்தனை வகை