உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

உணவு என வள்ளுவர் கூறினாரா? அளவறியாமல் ஆராருக்கோ ஆக்கிப்படைத்து ஆக்கம் கெட வள்ளுவம் கூறவில்லை என்பதை உணர்வார் விருந்தைக் சிக்கலெனக் கொள்ளார்; விருந்தின் பெயரால் அவரே சிக்கலை ஆக்கிக் கொண்டு சிதையின் எவரே அவிழ்த்து விடுவார் அவரை?

இனிப் பொருள் நிலையில் ‘எங்களால் மேடேற முடிய வில்லை; தாக்குப் பிடிக்கவும் கூட முடியவில்லை. கடன் உடன் வாங்கவும் வட்டிவாசி கட்டவுமே பாடாய்ப் படகிறோம்' என்று தம் பொருளியல் சிக்கலைக் கூறுவார் உளர். தனிவாழ்வு சிக்கலாகக் கூறப்பட்டவற்றுள், உள்ள அளவை ஆராய்ந்து பாராமல் உதவும் உதவியைப் பற்றி எச்சரித்த எச்சரிப்பை எண்ணிக் கொள்ளல் வேண்டும். மேலும் எண்ண வேண்டுவனவும் உண்டு.

வேளாண்மை என்பது உழவுத் தொழிலைக் குறிக்கும். அத்தொழிலே உலக வாழ்வின் அடிப்படைத் தொழில் ஆதலால் அதற்கு உதவி என்னும் பொருளும் உண்டாயிற்று. அவ்வேளாண்மைத் தொழிலுக்குக் கால்வாய் வாய்க்கால் கண்வாய் என்பன கட்டாயத் தேவையானவை.

குறித்த முச்சொற்களிலும் வாய் உண்டு. வாய் என்பதற்கு இடம் என்னும் பொதுப்பொருளும், உறுப்புச் சிறப்புப் பொருளும் உள்ளமை எவரும் அறிந்தது. போக்குவரவுக்கு உதவுவது வாய். உணவு நீர் முதலிய போக்கு வரவுக்கு உதவுவது உறுப்பு வாய்; புகுதல் வருதலுக்கு வழியாக இருப்பது இவ்வாய் என்னும் வாயில். அது நிலத்துப் பாய்ச்சலுக்கு உதவும் கண் வாய்க்கு நீர் வரும் வாய் கால்வாய்; கண் வாயிலிருந்து வயலுக்கு நீர் செல்லும் வாய், வாய்க்கால்.

நீர் வெளியேறுவதற்கு மடையில் புலிக்கண், யானைக் கண், மான் கண் எனக் கண்ணின் வடிவில் துளைகள் அமைத் தலால் அதனைக் கண்வாய் என்றனர். அக் கண்வாய்க்குக் கால்வாய் வழியே நீர் வரவு ஓரிரு நாள்கள் வரினும், அது வாய்க்கால் வழியே நாலைந்து திங்கள் அளவு சென்று ஒரு பயிர் விளைவு முழுதுறக் காண உதவும். இவ்வுழவடை அமைப்பை எடுத்துக் காட்டி வரவு செலவுத் திட்டம் இருக்க வேண்டும் வகையைத் தெளிவிக்கிறார். திருவள்ளுவர்,

"ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை

என்பது அது.

(478)